Deepavali 2016 Special Bus Services Starts today 26 – 10 -2016

Thanks for the Share Murugesan Velmurugan

Source News 7

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரசுப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வர வசதியாக, அன்றாட பேருந்துகள் உள்பட சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து, மொத்தம் 11,225 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம்- சானடோரியம், பூந்தமல்லி, அண்ணாநகர் மேற்கு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு, என 5 இடங்களிலிருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்த பயணிகள் மேலே குறிப்பிட்டுள்ள பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தவிர, சென்னை கோயம்பேட்டிலிருந்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் சென்று வர ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இணைப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044 24794709 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SETC #TNSTC #Deepavali_Specials_2016 #Chennai #Deepavali_Temporary_Busstands #TNSTC_Blog #Deepavali_Specials_TNSTC #Deepavali_Specials_SETC

bus_43

Advertisement
This entry was posted by Ar uN.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: