Usage of 5 Mirrors on AIS 052 Body Code MTC TNSTC

 

ஒரு திறமையான ஓட்டுனருக்கு கண்ணாடி என்பது மிகவும் உதவிகரமான ஒன்று சற்று மிகைப்படுத்தி கூறினால் முதுகின் பின்னால் உள்ள கண் போன்றது. தேசிய நெடுஞ்சாலலைகளில் குறிப்பாக ஆறு நான்கு வழிசாலைகளில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்களில் பெரும்பாலும் பின்னால் மற்றும் பக்கவாட்டில் இருந்து வரும் வாகனங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதுவது என வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சாலைகளை கார்பந்தய மைதானமாகவே பலரும் நினைத்து பெரிய வாகனங்களோடு போட்டியில் ஈடுபடுகின்றன. சிரிய வாகனங்கள் மிக நெருக்கத்தில் வரும்பொழுது குறிப்பிட்ட தூரத்தை தாண்டி பின்புற கண்ணாடியில் வாகனங்கள் தெரிவதில்லை.

இதேபோல் வாகனநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பெரும் மாநகரங்களில் பேருந்துகளை இயக்குவதில் பெரும் சவாலான விஷயம் தான் சாலையில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் நுழையும் இருசக்கர வாகனங்கள். பேருந்துகளை ஒட்டியே வரும் வாகனங்கள் என நெருக்கடியில் பேருந்துகளை இயக்குவதை எளிதாக்கவே ஓட்டுனரின் பார்வையில் இருந்து மறையும் இடங்களை தெளிவாக காட்டவே பேருந்தின் முன்பகுதியில் 5 கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. 5 கண்ணாடிகள் என்ன என்ன அதன் முழுமையான பயன் என்ன என்பதையே விளக்கவே இப்பதிவு.

எல்லோருக்கும் எளிமையாக புரியும் வண்ணத்தில் இந்த பதிவை தயார் செய்த வினோத்குமார் கந்தசாமி மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த நாகராஜ் அவர்களுக்கும் நன்றி. இதை தயார் செய்ய முழு உறுதுணையாக இருந்த சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.

Vinothkumar Kandasamy Linkedin

Click on images for enlarged view.

Advertisements

TNSTC Old Ticket Exhibition at Trichy

நமக்கெல்லாம் பேருந்து என்றாலே மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் பேருந்து பயணங்கள் என்றாலோ அதை புகைப்படம் எடுப்பது என்றாலோ கொண்டாட்டாம் தான். ஒவ்வொரு பேருந்தும் ஒவ்வொரு விதமான ரசனை, அழகு. பேருந்துகள் நம்மை விட்டு பிரிந்து சென்றாலும் அதன் அடையாளங்களாக இருப்பது அதன் புகைப்படங்களும், பயணச்சீட்டுகளும் தான். பேருந்துகள் போலவே அதில் கொடுக்கப்படும் பயணச்சீட்டுகளும் சுவாரஸ்யமான ஒன்று.

1972ல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலான பேருந்து பயணச்சீட்டுகளை சேகரித்து வைத்துள்ளார் பல பழைய பயணச்சீட்டுகள் இன்னும் கிடைக்கவில்லை அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை பேருந்துகளில் கொடுக்கப்பட்ட பயணச்சீட்டுகள், அரிதான பயணச்சீட்டுகள், பயணச்சீட்டுகளில் ஃபேன்சி (Fancy) எண்கள், கணித சிறப்பு எண்கள், 0 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையிலான பயணச்சீட்டுகள், தனியார் பேருந்து பயணச்சீட்டுகள், பேருந்து பாஸ் (Pass), கையால் எழுதிக் கொடுக்கப்படும் பயணச்சீட்டுகள், என பல வகையாக தொகுத்து இருக்கிறார்.

அடுத்த மாதம் 14,15,16 அன்று திருச்சியில் உலக பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக நடைபெறும் கண்காட்சியில் பேருந்து பயணச்சீட்டுகள் சுவாமிநாதனால் காட்சிப்படுத்த இருக்கிறது. இதைத் தவிர மற்ற சேகரிப்பார்கள் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகள், பழைய காலத்து பொருட்கள் ஆகியவையும் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன… தமிழகத்தின் பொது போக்குவரத்து சம்பந்தப்பட்ட பல வரலாற்று சிறப்புமிக்க தகவல்கள் இடம்பெறவுள்ளன. உங்கள் கண்களுக்கு நிச்சயமாக இது விருந்தாக அமையும்…

அனுமதி இலவசம்…
அனைவரும் வருக…

தேதி : ஜுன் 14, 15, 16

இடம் : ஶ்ரீநிவாசா ஹால், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்,
வில்லியம்ஸ் ரோடு, ஹோட்டல் பெமினா எதிர்புறம். திருச்சி – 620001.

SETC KMS built Ultra Deluxe bus

SETC recently added new ultra deluxe buses of “Vega” model built by Prakash. Few days before it also added buses built by of KMS with similar model. Below are some of the pics of KMS built ultra deluxe bus.
This particular bus below is with Kanyakumari depot and similar KMS built bus is added to Trivandrum depot also.

SETC Adds Seater Cum Sleeper in Chennai to Mysore route

SETC is already running AC Sleeper in Chennai to Mysore route. Recently a AC Seater+Sleeper is added to Chennai to Mysore route. It is available for online booking in TNSTC website.

Timings(both ends): 20:00(Seater+Sleeper), 21:00(Sleeper)
Fare(Including reservation charge in TNSTC website): Seater-825, Sleeper-1015.

Mysore to Chennai: @Bangalore: 22:50

Chennai to Mysore

Mysore to Chennai

May Day Wishes 2019

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 🙂

TNSTC New AC 3+2 Seater

A New era of TNSTC starts with newly introduced AC 3+2 Seater which started its maiden journey today. As announced by our Honorable CM Edappadi K Palanisamy and Transport Minister M Vijayabaskar New 3+2 AC Seater was flagged off today by CM. The New Variant 3+2 AC Seater Fare will be little more than Express services to benefit the public. This particular 3+2 Low Fare AC will be a great benefit to people for this summer season, similar 2 + 2 AC should be deployed in MTC also.

Two Buses flagged off today one will be on 122 Chennai Tiruvannamalai and Fare will be RS 215/- Depature from Chennai : 10:30, 22:45 | Depature from Tiruvannamalai : 05:15, 17:30 and 102 Chennai Vellore Fare will be RS 160/- Depature from Chennai : 10:00, 17:30 | Depature from Vellore : 06:30, 14:00.

Hope our public also should feel the responsibility to use the buses neat and don’t trash inside. Pics from Inaugural by Nagaraj Sir (SF444).

This slideshow requires JavaScript.

275 new buses inaugurated today

275 new buses inaugurated today by Honourable Tamilnadu CM Edapaddi K.Palanisamy at Chennai. These were procured at the cost of 68.99 crores.

Below are the split up of buses added to TNSTCs.

  • MTC – 17
  • TNSTC-Villupuram – 72
  • TNSTC-Salem – 43
  • TNSTC-Coimbatore – 75
  • TNSTC-Kumbakonam – 68.

Official press release

TNSTC Madurai New Buses January 7 2019 Inaugural

TNSTC Madurai gets 63 new buses in this inaugural this will be shared among Madurai, Dindigul and Virudhunagar Regions. clicks of Newbie on inaugural ceremony mixed of TN58 Madurai and TN57 Dindigul Regions.

Photos : Nagaraj M (SF444)

MTC Chennai New RED Buses January 7 2019 Inaugural

Today our Honorable CM Edapaddi K.Palanisamy falgged off 555 new buses from chennai.

Below are the split up.

MTC: 56
TNSTC-VPM: 82
TNSTC-SLM: 112
TNSTC-KUM: 102
TNSTC-CBE: 140
TNSTC-MDU: 63

Old Wine in a New Bottle

Today MTC got 56 newbie in full RED uniform this reminds of the buses running in late 60’s 70’s. A great change in automobile industry and bus body building we have seen a lot of improvements in TN Transport Department buses. A lot of color changes from the past to today. This RED will surely bring back the travel memories of the old peoples from 70’s. The side lettering’s in white is the highlight still if our government add our Tamilnadu emblem in the middle it will be a eye pleasing.

special features of the buses have single individual broad seats, pneumatic doors with sensor, wide entry exit almost double of the old buses. Hope MTC will maintain it well with cooperation from public.

புதுமையில் பழமை

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த சிகப்பு பேருந்துகள் எனக்கு 1960, 1970ம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்தில் வலம் வந்த சிகப்பு நகரப்பேருந்துகளையே ஞாபகப்படுத்துகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி பேருந்து கூண்டு கட்டுதலில் மாறுதல் என பல மாற்றங்கள் வந்தாலும் இந்த சிகப்பு வர்ணம் பின்னோகிதான் இழுத்துச் செல்கிறது. சென்னை தன் பேருந்து சேவைகளில் பல வர்ணங்களை பார்த்திருக்கும் ஆனால் கண்டிப்பா இந்த சிவப்பு வர்ணம் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் பசுமையான பயணநினைவுகளை மீட்டுக்கும். பேருந்தில் பக்கவாட்டில் வெள்ளை எழுத்துகளால் மாநகர்போக்குவரத்துக் கழகம் என்று எழுதி இருப்பது மிகச்சிறப்பாக உள்ளது. இன்னும் நமது அரசு அதில் தமிழ்நாடு முத்திரையை பதித்து புதிய பேருந்துகள் வெளிவந்தால் நம் கண்களுக்கு விருந்தாகும். அரசுப் பேருந்துகளில் அரசு முத்திரை இல்லாதது வருத்தமே.

To compare posting buses run in 70’s.

TNSTC Blog Calendar 2019

Happy New Year 2019

wishes from Team TNSTC Blog

Thanks to our followers who participated in our calendar contest thank you so much for our pics.

#New_Year_2019 #2019 #TNSTC_Blog

#we_Love_TNSTC ❤

Download the PDF version here

%d bloggers like this: