First in State TNSTC Tirunelveli Bus with CCTV and Bus Marshals

Source : tutyonline http://www.tutyonline.net/view/31_92342/20150516152734.html

First in State TNSTC Tirunelveli Buses gets CCTV. The Buses running in Srivaikundam area are fitted with CCTV to control unwanted clashes between Peoples of different communities. Main reason for this clashes starts at buses only the problem starts with school students and spread between villagers. To overcome this issues Thoothukudi Dist SP Ashwin.M Cotnis formed a committee, and spoke with Private Bus owner Associations and TNSTC officials. CCTV Camera have been fixed in private buses by their owners and in govt buses it will be fitted with private partnership.

TNSTC Tirunelveli Buses gets CCTV it will help Public a fear free travel, with CCTV a Bus Marshal will also be in that Bus. A policemen from nearby station will travel in this bus daily with the public to ensure a safe journey. This helps in controlling unwanted rowdyism, Chain Snatching, Eve Teasing, unwanted broadcast of Communal songs, Scribblings on Buses, Public nuisance all will be taken down at beginning stage itself. CCTV Camera in TNSTC bus came into picture today 16.05.2015 by Dist.Collector M.Ravikumar at Srivaikundam. A Telecast had been done to public how it is functioning in a big screen. A welcome move by the District Administration. It should be expanded first all over to Southern Districts and then throughout TN. Thanks to every personals who are all behind this idea’s implementation.

ஸ்ரீவைகுண்டம் அரசு பஸ்களில் சிசிடிவி கேமரா : ஆட்சியர் ரவிகுமார் தொடங்கி வைத்தார் 16.05.2015

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இத்திட்டத்தினை ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.

busopencollector

பேருந்துகளில் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, பஸ் மார்ஷல்களை நியமித்தல் மற்றும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி குற்றங்களை தடுப்பது என்பது தமிழக காவல்துறையில் ஒரு முன்னோடி திட்டமாகும். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களிடையே அவ்வப்போது எழுகின்ற சிறுசிறு பிரச்சனைகளினால் தேவையில்லாத விரோதங்கள் மற்றும் காழ்ப்புணர்ச்சி உண்டாகி அதனால் மிகப் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகின்றது. இதற்கு காவல்துறையினரால் சட்டப்படியான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படப்பட்டு வருகிறது.

எனினும், மக்களை பகையுணர்வு இல்லாமல் நல்வழிப்படுத்தும் விதமாக, பேரூர், ஸ்ரீமூலக்கரை, பத்மநாபமங்களம், பொன்னாங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று கிராம விழிப்புணர்வு குழு கூட்டங்கள் நடத்தி அவர்களுடன் கலந்துரையாடல் செய்ததில், கிராமங்களில் நடைபெற்ற மோதல்களுக்கு காரணமான நபர்கள் மீதும், தொடர்ந்து பிரச்சனை நிகழாவண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதும், இதனையும் தாண்டி இக்கிராமங்களில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு இக்கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி சென்று வருகின்ற மாணவ மாணவியர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது, அவர்களுக்கிடையே எழுகின்ற பிரச்சனைகளே சாதீய மோதல்களுக்கு காரணமாகிறது என்பதும் தெரிய வந்தது.

மேற்படி மாணவ மாணவியர் பயணம் செய்கின்ற பேருந்துகளில் ஏற்படுகின்ற சிறு சிறு பிரச்சனைகள் முழுவதையும் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இப்பகுதியில் நிரந்திர அமைதி ஏற்படுத்த முடியும் என்பதும் தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக, பேருந்துகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு, 15.04.2015 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் எம். கோட்னீஸ் அவர்களால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில், இவ்வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, தனியார் பேருந்துகளில், அவர்களது சொந்த செலவிலும், அரசுப் பேருந்துகளில் நன்கொடையாளர்கள் உதவியுடனும் கேமிராக்களை பொருத்தி, பாதுகாப்பிற்காக காவலர்களை பிரத்யேகமாக நியமிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரால் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளில் பாதுகாப்பு பணிக்காக காவலர்களை நியமிக்கும் ‘பஸ் மார்ஷல்’ என்னும் முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இத்திட்டத்தின் பிரகாரம் காவலர்கள் பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்த பஸ் மார்ஷல் திட்டமானது பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

cctvcamerabuscollector

பஸ் மார்ஷல் மற்றும் கண்காணிப்பு கேமிராக்களை பேருந்துகளில் பொருத்தும் திட்டங்களினால், பொது மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது உறுதி செய்யப்படுகிறது. மேலும், பேருந்துகளில் சாதீய ரீதியிலான பாடல்கள் மற்றும் வாசகங்களை ஒலிபரப்பு செய்பவர்கள், உச்சரிப்பவர்கள் மற்றும் எழுதுபவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகளை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவும், குற்ற செயல்கள், திருட்டு, ரவுடியிசம், பெண்களை கேலி செய்தல் போன்ற வன்முறை செயல்களை கட்டுப்படுத்தவும் உண்மையிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மட்டும் இனம்கண்டறிந்து, அவர்கள் மீது மட்டுமே உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இக்கண்காணிப்பு கேமிராக்கள் பெரிதும் பயன்படக் கூடும். பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் பிரச்சனைகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இது உதவிகரமாக இருக்கும்.

முதற்கட்டமாக, மாவட்ட காவல் துறையின் மூலம் தமிழகத்திலேயே முதல் முறையாக (21.04.2015) செவ்வாய்க்கிழமை பேருந்துகளில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தியும், பாதுகாப்பிற்காக காவலர்களை நியமித்தும், குற்றங்களை கட்டுப்படுத்தும் பஸ் மார்ஷல்’ என்ற இந்த முன்னோடி திட்டத்தை ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.ரவி குமார் , துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கந்தசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சி.குமார், தே.குமார் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு கண்காணிப்பு கேமிரா இயக்கப்படும் செயல்முறை விளக்கம் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.

This entry was posted by Ar uN.

Leave a comment