Flashback: Only Dindigul region bus to cross Salem

நமது குழுவில் எத்தனை பேருக்கு இந்த முயற்சியைப் பற்றி தெரியும்??

AUG 2015 வாக்கில் சேலம் மண்டலத்தின் குமுளி – சேலம் – பெங்களூரு சேவையை போல் கம்பம்-2 கிளையில் இருந்து ஓசூர் – தேனி / கம்பம் ரூட் முயற்சி செய்யப்பட்டது.

எனக்கு தெரிந்து சேலம் நகரின் வடக்கே வந்த ஓரே TN57 பேருந்து இதுவாக தான் இருக்கும்.

ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் போயிற்று.

TN57 N 2228

TNSTC-Salem started Kumily-Bangalore service via Salem in Aug’15. In same lines, TNSTC-Madurai’s Dindigul region started Hosur-Theni/Cumbum service for some time. To our knowledge this is the only Dindigul region(TN57) service to run north of salem till Hosur.

Flashback: Only TATA Bus built by Dindigul region

To our knowledge, TNSTC-Madurai’s Dindigul region didnt have any TML with them. Infact before 4-5 years, TNSTC-Madurai received good number of TML buses. But all of those were retained in Madurai region and none were seen running with Virudhunagar/Dindigul regions.

TN58 N 2113. This is little unique as this was built by Vathlagundu body building unit of Dindigul region. Though they didnt own any TML, they built this and sent it to Madurai region. This is one very long runner which ran in Tirupur-Nagercoil route. Typical running pattern of this bus was Madurai-Tirupur-Nagercoil-Madurai. With few hours rest, they will start the trip again.

Flashback: SETC Registration number history

TN01 N சீரியல் ஆரம்பிக்கப்பட்ட போது திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் 1 முதல் 1000 வரையில் மற்றும் 6000 முதல் பதிவெண் கொண்டதாக இருந்தது. 2007ம் ஆண்டில் இருந்து தனித்துவமான வரிசைகள் இழந்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தோடு தன் பதிவு எண்ணை பகிர்ந்து கொண்டது. மாநகரப் போக்குவரத்தின் அசுர வளர்ச்சி இன்று AN வரிசை வரை பேருந்துகள் வேகமாக வந்தவண்ணம் உள்ளன. இதில் விரைவுப் போக்குவரத்துக் கழகம் 6000 வரிசையில் இருந்து பின் சென்று 45** ஆரம்பித்து மாற்றி மாற்றி குளறுப்படியாக ஒரு பேருந்தின் பதிவெண் சொன்னால் எளிதில் அடையாளம் காண முடியாது போனது. இதில் 46** தொடங்கி வரிசைக்கு ஒன்றாக ஒரு பேருந்து படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் விடுப்பட்டப் 45, 50, 52**, பேருந்துகள் படம் இருந்தால் பதிவு செய்யவும். இப்போது இருக்கும் வரிசையில் 01AN மாநகரப் போக்குவரத்துக் கழகமும் 01EN ( EXPRESS NATIONALIZED) வரிசையை விரைவுப் போக்குவரத்துக் கழகமும் பயண்படுத்தலாம். அல்லது TN 02N TN 07N இதில் ஏதேனும் ஒன்றை பயண்படுத்தலாம்.

When TN01 N series was started, TTC was registering their buses from 1 to 1000 reg.nos and later they were alloted from 6000. From 2007, this batch allotment was stopped and SETC was asked to share their reg.nos along with MTC. Due to heavy increase in number of buses that is getting added to MTC, TN01 completed N and it moved to AN.

During this period SETC moved from 6000 to 45XX and it became difficult for us to identify the buses based on the reg nos. They started registering 1 bus each from 46XX series. If people have 45XX or 50XX, 52XX, please share it.

Suggestion from our side is MTC can continue to use TN01 and SETC can move to TN01 EN (EXPRESS NATIONALIZED) or they can also use TN02 N or TN07 N which was used by DCTC, JJTC/RGTC earlier.

Flashback: TNSTC-Salem buses crossing Madurai

Salem division operates 4 buses in routes that crosses Madurai. Two routes were old and two were added few years back. Below are those routes and their buses in visuals.

Salem to Sivakasi – TN30 N 1022, TN30 N 1221 – Johnsonpet-1 depot

Salem to Kovilpatti – TN30 N 1033 – Johnsonpet-1 depot

Salem/Namakkal to Rajapalayam – TN30 N 0929 – Omalur depot.

Salem to Courtallam – TN30 N 1306 – Meyyanur depot.

Flashback: Last and First of TNSTC-Coimbatore

Wondering what is last and first of TNSTC-Coimbatore? Here we go..

Last Colorful bus of TNSTC-Coimbatore

TN38 N 2610 – This is the last of bus of TNSTC-Coimbatore’s Coimbatore region to be part of colorful journey over many decades.

 • Built by CEC
 • Had Orange+Gold livery. This particular design from CEC and started with 25XX series and ended with 27XX series.
 • Owned by Ukkadam-1 depot and now HOB.
 • This bus never sticked to single route when it was with 3X2 configuration. Generally this was used as Special bus. Have seen it running in Coimbatore-Madurai, Coimbatore-Chennai, Coimbatore-Pollachi/Palani/Udumalpet, Masaniamman temple to Madurai during Ammavasai time.
 • For short period it ran in Coimbatore to Dindigul via Pollachi with permanent stickers
 • Currently it is converted as city bus and is with HOB running in 26A route.

First bus with Uniform livery of TNSTC-Coimbatore

 • Built by CEC
 • Had the same design as the last colorful bus of Coimbatore region
 • Ran in Coimbatore to Sivakasi via Dharapuram, Madurai. 2612 also ran in same route.
 • Owned by Ondipudhur-1 Depot.
 • Had Ivory + Maroon share and moved to green color.

Flashback: JNNURM Semi Low Floor buses of Madurai

JNNURM – With this funding Coimbatore and Madurai got close to 240 new SLFs. All SLFs procured with this funding were of Fully built Vehicle(FBV) from OEMs Ashok Leyland.

Key points on SLFs of Madurai.

 • Branded as Vaigai Ratham.
 • These SLFs confirm to Urban bus standards and later we got standards for all type of buses released and buses need to be built according to this specification now.
 • All AshLey Viking SLFs were built by Irizar TVS from Trichy and Pudhukottai. These came with White and Blue liveries.
 • All TATA SLFs were built by TATA Marcopolo and had Blue, Orange, Yellow liveries.
 • For sometime these new SLFs were operated in Intercity routes and after a complaint raised to funding agency, these were brought back to city routes.
 • All SLFs had GPS devices fitted for stop announcements. But they were never used.
 • TN58 N 1811 – Marcopolo got rear camera fitted on trial.
 • TN58 N 1756 and TN58N1758 are the first set of Marcopolo buses to get Yellow livery. They both ran in C3/C4 circular routes.
 • Very few buses got JNNURM Tamil stickers in front windshield.
 • Logo specifications were followed correctly in Marcopolo and Ashley SLFs it were quite smaller.
 • Marcopolo built buses had Seat belts in front seats and seats near to doors as per standards.

We have done a writeup when JNNURM buses were inaugurated. The post details are below

Some Visuals..

PTC Pallavan Transport Tickets in 1976’s

போக்குவரத்து துறை வரலாறு

1976ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சீட்டுக்கள்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறையில் இருந்து 1029 பேருந்துகளை எடுத்து 01.01.1972ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. பல்லவன் போக்குவரத்துக் கழகம் சென்னை மாகாணம் வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தனது சேவையை வழங்கிவந்ததது. அதுபோக போக்குவரத்து துறையால் இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகளும் (EXPRESS) பல்லவன் கட்டுப்பாட்டில் இருந்தது. நண்பர் Subramanian Ram அவர்களின் தேடலில் கிடைத்தது இந்த பொக்கிஷங்கள் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சீட்டுக்கள். இதன் அசல் உரிமையாளர்களுக்கு நன்றி. பல்லவன் போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட முன்றரை ஆண்டுகள் கழித்து அதன் செயல்திறன் மேம்பட பல்லவன் போக்குவரத்துக் கழகம் முன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

1. பெருநகர் பிரிவு : சென்னையில் இருந்து 25கீமி உட்பட்ட பகுதிகளில் இந்த பிரிவு இயங்கியது.
2. புறநகர் பிரிவு : சென்னையில் இருந்து பக்கத்தில் உள்ள வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டங்களுக்கு இந்த பிரிவு இயங்கியது.
3. விரைவுப் பிரிவு : சென்னையில் இருந்து தொலைத்தூரம் இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகள்.

மேலே உள்ள தகவல் திரு Nagaraj CN சார் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த படத்தில் முன்று பயணச்சீட்டுக்கள் இருக்கும் அதில்

1. 40காசு நகர் பேருந்துக்கான பயணச்சீட்டு. இந்த காலகட்டத்தில் குறைந்தப்பட்சமாக கட்டணம் 20 பைசாவும் அதிகப்பட்சமாக 130 பைசாவாகவும் இருந்தது.
2. 14ரூபாய்க்கு வழங்கப்பட்ட மிக அரிதான மாதாந்திர பயணச்சீட்டு 15.07.1976ம் ஆண்டு ஜுலை ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டது. பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் METRO என்று பிரிவை குறிப்பிட்டுள்ளது. பாரிமுனையில் இருந்து ஆழ்வார்பேட்டை வரை பயணம் செய்ய வழங்கப்பட்டது.
3. 16ரூபாய்க்கு வழங்கப்பட்ட விரைவுப் பிரிவின் பயணச்சீட்டு அப்போது இருந்த பயணக்கட்டண அடிப்படையில் பார்க்கும்போது உத்தேசமாக இந்த பயணச்சீட்டு திருச்சி வரை இருந்திருக்கலாம்.

மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தை பற்றி.

01.01.1972 பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.
01.04.1973 பேருந்துகள் இயக்கத்திற்கு தகுந்தவாறு பணிமனைகள் ஒழுங்குப்படுத்துப்பட்ட நாள்.
01.05.1973 வட்டப்பேருந்துகள் இனைப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட நாள்.
15.08.1974 விமான நிலையத்திற்கு தனி சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள்.
01.10.1974 அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்பட்ட நாள்.
15.09.1975 சிறப்பான செயல்ப்பாட்டிற்காக முன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நாள் பெருநகர் (METRO) புறநகர் (DISTRICT) விரைவு (EXPRESS).
05.06.1976 முதன் முறையாக சிற்றுந்துகள் (Mini Bus) இயக்கப்பட்ட நாள்.
01.04.1977 பெருமளவில் பேருந்துகள் கிழிக்கப்பட்டு புதிய பேருந்துகள் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயக்கப்பட்ட நாள்.
10.05.1977 நகர விரைவுப் பேருந்துகள் CITY EXPRESS அறிமுகப்படுத்தப்பட்ட நாள்.
16.01.1980 விரைவு பிரிவு பல்லவனில் இருந்து பிரிக்கப்பட்டு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட நாள்.
07.04.1980 முதன்முதலாக முன்று வாசல்கள் கொண்ட SEMI AUTOMATIC TRANSMISSION பேருந்துகள் இயக்கப்பட்ட நாள்.
24.10.1980 கூட்டம் அதிகமான சில வழித்தடத்தில் கூடுதலாக இன்னொரு நடத்துனர் (ADDITIONAL CONDUCTOR) நியமிக்கப்பட்ட நாள்.
21.11.1980 முதன்முதலாக ஏன் இந்தியாவில் கூட இருக்கலாம் பெண் நடத்துனர்கள் (LADY CONDUCTOR) நியமிக்கப்பட்ட நாள்.
30.08.1981 நகரின் உட்புற பகுதிகளுக்கு சிற்றுந்துகள் இயக்கப்பட்ட நாள்.
01.12.1982 புறநகர் பிரிவு பிரிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட நாள்.
02.07.1986 குறைந்த நிறுத்தங்கள் நின்று செல்லும் மஞ்சள் நிறத்தில் தடப்பலகை V FAST YELLOW BOARD அறிமுகப்படுத்தப்பட்ட நாள். இந்த பேருந்துகள் இயக்கப்பட்ட போது பயணச்சலுகை அட்டைகள் இந்த பேருந்துகளில் செல்லாது இதனால் பொது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு வந்த பிறகு V FAST இணையாகக் J சேவைகள் இயக்கப்பட்டது.
19.01.1994 பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து அயனாவரத்தை தலைமையாக கொண்டு DATC டாக்டர் அம்பேத்கர் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட நாள்.

Transport History

PTC Pallavan Transport Tickets in 1976’s

On 01.01.1972 PTC Pallavan Transport Corporation formed taking 1029 buses from State Transport Department. Pallavan served in Chennai, South Arcot, North Arcot districts and run Express Services operated by State Transport Department. These tickets were collected by our friend Subramanian Ram from private websites thanks to its original uploaders. From the formation of Pallavan after 3.5 yrs bifurcated into 3 wings for efficiency of operations.

1. METRO : 25Kms from Chennai city Limit
2. DISTRICT : operations to near by District of South Arcot North Arcot Districts.
3. EXPRESS : Long Distance Express service from Chennai.

Above information was given by Nagaraj CN sir.

The image contains three types of tickets

1. 40 Ps ticket of City bus at that time lowest ticket was 20Ps and highest was 130 Ps.
2. Rs 14/- A very rare monthly pass issued on 15.07.1976 for July August month it can be used on only METRO wing of Pallavan. Below Pallavan Transport Corporation its clearly mentioned as METRO. It was issued to travel between Parrys Corner to Alwarpet.
3.Rs16/- Ticket issued on Express wing of Pallavan according to fare structure on that period it may be approx for Chennai Trichy distance.

Some intresting facts about PTC Pallavan

01.01.1972 Formation of PTC Pallavan Transport Corporation.
01.04.1973 Reorganization of Depots based on operations.
01.05.1973 Introduction of Radial and Feeder Routes.
15.08.1974 Introduction of Airport Services.
01.10.1974 Large scale augmentation of Fleet in Metropolitan area.
15.09.1975 Bifurcation of PTC into PTC (METRO), PTC (DISTRICT), PTC (EXPRESS) for efficiency of services.
05.06.1976 Introduction of Mini Buses.
01.04.1977 Large Scale replacement and augmentation of Fleet through World Bank loan.
10.05.1977 Introduction of City Express Services.
16.01.1980 PTC (EXPRESS) Delinked and formed as TTC Thiruvalluvar Transport Corporation.
07.04.1980 Introduction of a New 3 Door Bus with SEMI AUTOMATIC TRANSMISSION.
24.10.1980 Posting of Additional Conductors on certain Routes.
21.11.1980 Posting of First LADY CONDUCTOR Maybe first in India too.
30.08.1981 Introduction of Mini Bus in unserved areas.
01.12.1982 PTC (DISTRICT) Delinked and formed as PATC Pattukottai Alagiri Transport Corporation.
02.07.1986 Introduction of V FAST YELLOW BOARD Services. On inroduction Subsidized travel was not allowed in the V service (student concessions, season tickets, etc.). Due to pressure from the travelling public, however, the J service
with subsidized travel was introduced.
19.01.1994 Bifurcation of PTC into DATC Dr.Ambedkar Transport Corporation.

#10_years_of_TNSTC_BLOG #TNSTC #Transport_History #PTC_Pallavan #TTC_Thiruvalluvar #PATC_Pattukottai_Alagiri #DATC_DR_Ambedkar
#TNSTC_BLOG #We_LOVE_TNSTC

Pallavan Tickets_1

FORD Buses in Tamilnadu Transport Corporation

போக்குவரத்து வரலாறு

போக்குவரத்து துறையில் ஃபோர்டு பேருந்துகள்

இந்த பேருந்து புகைப்படம் தம்பி @sam s Chella அவர்களால் பகிர்வு செய்யப்பட்டது கோனலாக கிடைத்த பேருந்து ஒரளவு மீள் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது அதன் அசல் உரிமையாளருக்கு நன்றி. 1987ம் ஆண்டு ஃபோர்டு பேருந்துகள் தமிழகப் போக்குவரத்துக் கழகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள சிம்ப்சன் நிறுவனத்தினரால் விற்பனை செய்யப்பட்டது. முன்புறம் மற்றும் பின்புறம் இன்ஜின் பொருத்தப்பட்ட இரு மாடல்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு வந்தது. 6+1 சின்கரோமசை கியர் பாக்ஸ் பேருந்துகள் . பல்லவன் பாண்டியன் சேரன் போக்குவரத்துக் கழகங்கள் பெரும்பாலும் நகரப் பேருந்துகளாக இயங்கின. மற்றப் போக்குவரத்துக் கழகங்கள் புறநகர் சேவைகளாக இயங்கின. பட்டுக்கோட்டை அழகிரி ஆரணி சென்னை வழித்தடத்தில் இயங்கியது லைலாண்டு பேருந்துகளை விட சத்தம் அதிகமாகவும் இயக்கத்திற்கு சீரமமாக ஸ்டியரிங் அதிர்வு அதிகமாக இருந்தது எனவும் உதிரிபாகங்கள் சரிவர கிடைக்காத நிலையில் இயக்கத்திற்கு வந்த முன்று அல்ல நான்கு ஆண்டில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதில் பாண்டியன் மற்றும் விதிவிலக்காக லைலாண்டு இன்ஜின் பொருத்தப்பட்டு சிறிது காலம் இயங்கியது.

தகவல்கள் அனைத்தும் செல்வன் என்ற நண்பர் SSC வலைப்பக்கத்தில் பதிவு செய்தது அவருக்கு நன்றி.

Transport History

Ford Buses in Transport Corporation

Photo was shared by Sam S Chella which had a bad shape we recreated the image thanks to the original uploader. Ford buses were introduced in almost all the STCs during 1987 and their engine sound was similar to Premier roadmaster. Simpsons, chennai was the ford dealer. Due to frequent break downs these buses were withdrawn within few years. Pallavan, Cheran, Pandian were running as city buses others run in mofussil route. these buses came with a 6+1 Synchronize Gear Box front and rear engine models, Steering Vibration were high and sounded louder than leyland buses. PRC tried to extend the life of ford buses by replacing the engine with old AL bus engines, but were scrapped after 2 -3 years. At that time buses were being registered in TCB. PRC ford buses were run in city bus routes, while PATC used it for for mofussil routes, very bad decision. PATC Arani – Chennai bus and the engine struggled a lot.

These info were shared by Selvan K in SSC thread thanks to him.

PTC FORD Rear Edit.jpg

Pallavan Ford Bus
 

An appeal from the Honble Chief Minister for Contributions to Chief Ministers Public Relief Fund (CMPRF) towards relief operations – Coronavirus

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

பேருந்து நண்பர்கள் அனைவருக்கும் ஒரு இனிய வேண்டுகோள்.

தங்களால் இயன்ற நன்கொடைகளை தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முதல் அமைச்சரின் பொது நிதிக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் அனைவரும் கீழ் கண்ட இணைப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்

நன்றி

874 Bengaluru – Nellai AcSS

TN01 AN 3206
%d bloggers like this: