இணைப்பு பேருந்து அறிவிப்பு
இன்று நான் பயணம் செய்த பேருந்தில் கண்ட ஒரு ஸ்டிக்கர் என்னை உற்றுப்பார்க்க வைத்தது.
அதை பற்றி நடத்துனரிடம் விசாரித்தேன்.
இந்த வண்டியின் தடம் எண் 112 B, மதியம் சேலத்திலிருந்து புறப்பட்டு தருமபுரி ராயக்கோட்டை வழியாக ஓசூர் செல்லும் பேருந்து ஆகும்.
அப்படி செல்லும் பொழுது இந்த பேருந்து ராயக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு சரியாக மாலை 4.30 மணிக்கு செல்லவேண்டுமாம். அதே சமயத்திற்கு பாலக்கோட்டில் இருந்து சிறு சிறு கிராமம் வழியாக ராயக்கோட்டை வரும் P 16 என்ற பேருந்திற்கு இந்த பேருந்து இணைப்பு பேருந்தாக நின்று பயணிகளை ஏற்றி செல்லுமாறும், இதை அந்த பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் உறுதி செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பலவருடங்களாக இந்த வழியில் பயணித்த எனக்கு இது நல்ல அறிவிப்பாக தோன்றியது. எனவே இதை பதிவு செய்கிறேன்.
இது பயன்பாட்டிற்கு வந்து 5-6 மாதங்களாகிறதும் என்பது கூடுதல் தகவல்.
