PTC Pallavan Transport Tickets in 1976’s
போக்குவரத்து துறை வரலாறு
1976ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சீட்டுக்கள்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறையில் இருந்து 1029 பேருந்துகளை எடுத்து 01.01.1972ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. பல்லவன் போக்குவரத்துக் கழகம் சென்னை மாகாணம் வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தனது சேவையை வழங்கிவந்ததது. அதுபோக போக்குவரத்து துறையால் இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகளும் (EXPRESS) பல்லவன் கட்டுப்பாட்டில் இருந்தது. நண்பர் Subramanian Ram அவர்களின் தேடலில் கிடைத்தது இந்த பொக்கிஷங்கள் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சீட்டுக்கள். இதன் அசல் உரிமையாளர்களுக்கு நன்றி. பல்லவன் போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட முன்றரை ஆண்டுகள் கழித்து அதன் செயல்திறன் மேம்பட பல்லவன் போக்குவரத்துக் கழகம் முன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
1. பெருநகர் பிரிவு : சென்னையில் இருந்து 25கீமி உட்பட்ட பகுதிகளில் இந்த பிரிவு இயங்கியது.
2. புறநகர் பிரிவு : சென்னையில் இருந்து பக்கத்தில் உள்ள வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டங்களுக்கு இந்த பிரிவு இயங்கியது.
3. விரைவுப் பிரிவு : சென்னையில் இருந்து தொலைத்தூரம் இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகள்.
மேலே உள்ள தகவல் திரு Nagaraj CN சார் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த படத்தில் முன்று பயணச்சீட்டுக்கள் இருக்கும் அதில்
1. 40காசு நகர் பேருந்துக்கான பயணச்சீட்டு. இந்த காலகட்டத்தில் குறைந்தப்பட்சமாக கட்டணம் 20 பைசாவும் அதிகப்பட்சமாக 130 பைசாவாகவும் இருந்தது.
2. 14ரூபாய்க்கு வழங்கப்பட்ட மிக அரிதான மாதாந்திர பயணச்சீட்டு 15.07.1976ம் ஆண்டு ஜுலை ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டது. பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் METRO என்று பிரிவை குறிப்பிட்டுள்ளது. பாரிமுனையில் இருந்து ஆழ்வார்பேட்டை வரை பயணம் செய்ய வழங்கப்பட்டது.
3. 16ரூபாய்க்கு வழங்கப்பட்ட விரைவுப் பிரிவின் பயணச்சீட்டு அப்போது இருந்த பயணக்கட்டண அடிப்படையில் பார்க்கும்போது உத்தேசமாக இந்த பயணச்சீட்டு திருச்சி வரை இருந்திருக்கலாம்.
மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தை பற்றி.
01.01.1972 பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.
01.04.1973 பேருந்துகள் இயக்கத்திற்கு தகுந்தவாறு பணிமனைகள் ஒழுங்குப்படுத்துப்பட்ட நாள்.
01.05.1973 வட்டப்பேருந்துகள் இனைப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட நாள்.
15.08.1974 விமான நிலையத்திற்கு தனி சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள்.
01.10.1974 அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்பட்ட நாள்.
15.09.1975 சிறப்பான செயல்ப்பாட்டிற்காக முன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நாள் பெருநகர் (METRO) புறநகர் (DISTRICT) விரைவு (EXPRESS).
05.06.1976 முதன் முறையாக சிற்றுந்துகள் (Mini Bus) இயக்கப்பட்ட நாள்.
01.04.1977 பெருமளவில் பேருந்துகள் கிழிக்கப்பட்டு புதிய பேருந்துகள் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயக்கப்பட்ட நாள்.
10.05.1977 நகர விரைவுப் பேருந்துகள் CITY EXPRESS அறிமுகப்படுத்தப்பட்ட நாள்.
16.01.1980 விரைவு பிரிவு பல்லவனில் இருந்து பிரிக்கப்பட்டு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட நாள்.
07.04.1980 முதன்முதலாக முன்று வாசல்கள் கொண்ட SEMI AUTOMATIC TRANSMISSION பேருந்துகள் இயக்கப்பட்ட நாள்.
24.10.1980 கூட்டம் அதிகமான சில வழித்தடத்தில் கூடுதலாக இன்னொரு நடத்துனர் (ADDITIONAL CONDUCTOR) நியமிக்கப்பட்ட நாள்.
21.11.1980 முதன்முதலாக ஏன் இந்தியாவில் கூட இருக்கலாம் பெண் நடத்துனர்கள் (LADY CONDUCTOR) நியமிக்கப்பட்ட நாள்.
30.08.1981 நகரின் உட்புற பகுதிகளுக்கு சிற்றுந்துகள் இயக்கப்பட்ட நாள்.
01.12.1982 புறநகர் பிரிவு பிரிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட நாள்.
02.07.1986 குறைந்த நிறுத்தங்கள் நின்று செல்லும் மஞ்சள் நிறத்தில் தடப்பலகை V FAST YELLOW BOARD அறிமுகப்படுத்தப்பட்ட நாள். இந்த பேருந்துகள் இயக்கப்பட்ட போது பயணச்சலுகை அட்டைகள் இந்த பேருந்துகளில் செல்லாது இதனால் பொது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு வந்த பிறகு V FAST இணையாகக் J சேவைகள் இயக்கப்பட்டது.
19.01.1994 பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து அயனாவரத்தை தலைமையாக கொண்டு DATC டாக்டர் அம்பேத்கர் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட நாள்.
Transport History
PTC Pallavan Transport Tickets in 1976’s
On 01.01.1972 PTC Pallavan Transport Corporation formed taking 1029 buses from State Transport Department. Pallavan served in Chennai, South Arcot, North Arcot districts and run Express Services operated by State Transport Department. These tickets were collected by our friend Subramanian Ram from private websites thanks to its original uploaders. From the formation of Pallavan after 3.5 yrs bifurcated into 3 wings for efficiency of operations.
1. METRO : 25Kms from Chennai city Limit
2. DISTRICT : operations to near by District of South Arcot North Arcot Districts.
3. EXPRESS : Long Distance Express service from Chennai.
Above information was given by Nagaraj CN sir.
The image contains three types of tickets
1. 40 Ps ticket of City bus at that time lowest ticket was 20Ps and highest was 130 Ps.
2. Rs 14/- A very rare monthly pass issued on 15.07.1976 for July August month it can be used on only METRO wing of Pallavan. Below Pallavan Transport Corporation its clearly mentioned as METRO. It was issued to travel between Parrys Corner to Alwarpet.
3.Rs16/- Ticket issued on Express wing of Pallavan according to fare structure on that period it may be approx for Chennai Trichy distance.
Some intresting facts about PTC Pallavan
01.01.1972 Formation of PTC Pallavan Transport Corporation.
01.04.1973 Reorganization of Depots based on operations.
01.05.1973 Introduction of Radial and Feeder Routes.
15.08.1974 Introduction of Airport Services.
01.10.1974 Large scale augmentation of Fleet in Metropolitan area.
15.09.1975 Bifurcation of PTC into PTC (METRO), PTC (DISTRICT), PTC (EXPRESS) for efficiency of services.
05.06.1976 Introduction of Mini Buses.
01.04.1977 Large Scale replacement and augmentation of Fleet through World Bank loan.
10.05.1977 Introduction of City Express Services.
16.01.1980 PTC (EXPRESS) Delinked and formed as TTC Thiruvalluvar Transport Corporation.
07.04.1980 Introduction of a New 3 Door Bus with SEMI AUTOMATIC TRANSMISSION.
24.10.1980 Posting of Additional Conductors on certain Routes.
21.11.1980 Posting of First LADY CONDUCTOR Maybe first in India too.
30.08.1981 Introduction of Mini Bus in unserved areas.
01.12.1982 PTC (DISTRICT) Delinked and formed as PATC Pattukottai Alagiri Transport Corporation.
02.07.1986 Introduction of V FAST YELLOW BOARD Services. On inroduction Subsidized travel was not allowed in the V service (student concessions, season tickets, etc.). Due to pressure from the travelling public, however, the J service
with subsidized travel was introduced.
19.01.1994 Bifurcation of PTC into DATC Dr.Ambedkar Transport Corporation.
#10_years_of_TNSTC_BLOG #TNSTC #Transport_History #PTC_Pallavan #TTC_Thiruvalluvar #PATC_Pattukottai_Alagiri #DATC_DR_Ambedkar
#TNSTC_BLOG #We_LOVE_TNSTC ❤