A little bit of courtesy will do wonders

வாழ்க்கையில நமக்கு இல்லாத டென்ஷனா ?? நம்மலே இவ்வளவு பிரச்சினைகள நடுவுல ஊருக்கு போயிட்டு இருக்கோம் .. நமக்கு மட்டும் இப்படி ஏன் நடக்குது ?? இதுல இவனுங்க வேற டார்ச்சர் பண்ணுறாங்க.. புரிஞ்சுக்கவே மாட்டாங்களா !!!

போது இடத்தில் அதுவும் பஸ்டாண்டில் சன்டை ஏற்பட்டால் நம்மில் பெரும்பாலானவர்கள் எண்ணம் மேலே சொன்னது போல இருக்கும்.

அதுதான் எதார்த்தமும் கூட..

எப்போதும் நாம் மகிழ்ச்சியுடன் பயணிப்பதில்லை. சகிப்புத்தன்மை எப்போதும் நம்முடன் நிரந்தரமாக தங்கபோவதும் இல்லை. இது பயணிகளுக்கும், ஊழியர்களுக்கு, அனைவருக்கும் பொதுவானது.

ஆனால் எல்லா விழா நாட்களில் குடும்பத்தினருடன் கொண்டாடாமல் நமக்காக இரவு பகலாக ஸ்டீயரிஙை பிடித்து, டிக்கெட் இயந்திரத்திடம் மற்றும் டிப்போவில் மல்லுக்கட்டும் போது நமது உழைப்பு ஒரு படி கீழேதான் என என்ன தோன்றுகிறது. அதற்குதானே அவர்கள் சம்பளம் வாங்குகின்றனர் என ஒருபுறம் தர்க்கம் செய்யலாம்.. ஆனால் யோசித்து பார்த்தால் நம்மில் பலர் அனைத்து விழா நாட்களில் வேலை செய்திருக்க மாட்டோம். இதை எல்லாம் நினைக்கும் போது அவர்களிடம் சற்றே பணிந்து போனால் நமது கௌரவம் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை என எண்ணுகிறேன்.

இதை பதியும் நான் ஒன்றும் புத்தன் இல்லை. கடந்த காலத்தில் பல முறை நானும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் சற்று நேரம் கழித்து ஒரு வேலை நாம் இதை தவிர்த்திருக்கலாமே என பல முறை வருந்தியதுண்டு ( 3,4 நிகழ்வுகளை தவிர). நமக்கு நடந்தால் நமக்கு அது ஒரே ஒரு வாக்குவாதம்.. சற்று நினைத்து பாருங்கள்.நம்மைபோல் எத்தனை மனிதர்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.. எத்தனை வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடும். எத்தனை டென்ஷன் !!

அதனால் முடிந்தவரை அவர்களிடம் கனிவாக இருக்க முயலுங்கள். அவர்களிடமே தூண்டுதல் இருந்தால் சற்று பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். நானும் முயற்சிக்கிறேன்..

இப்போது உள்ள காலகட்டத்தில் ஒரு சாதாரண மனிதனின் புன்னகை விலைமதிப்பற்றது.

In today’s world ,smile of a common man is priceless

This entry was posted by tn70b.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: