SETC sees Increased number of Passengers after inducting new buses
After inducting new buses to the fleet, SETC sees increased numbers of passengers. 600 new buses got added to the fleet and another 300 new buses are expected to join the fleet.
On Average 75000 people are travelling in SETC daily and it is expected to cross 1lakh soon.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் சொகுசு, ஏசி, கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய பேருந்துகளின் வருகையால், பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. மாதந்தோறும் 3 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களில் தினமும் சுமார் 1,080 பேருந்துகள் இயக் கப்படுகின்றன. தினமும் சராசரியாக 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்துகள் வழங்கப்படாததால், பழைய பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டன. இத னால், பொதுமக்கள் அரசு விரைவு பேருந்துகளைத் தவிர்த்து ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 600 புதிய பேருந்துகள் இணைக்கப் பட்டுள்ளன.
ஏசி வசதியுள்ள பேருந்துகள், கழிப்பறை வசதி கொண்ட பேருந் துகள், சொகுசு பேருந்துகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய பேருந்துகள் பயணிகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் எண்ணிக் கையும் கணிசமாக அதிகரித் துள்ளது.
இதையடுத்து, வரும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டி கையை முன்னிட்டு, பொதுமக்கள் ஆர்வமாக அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பயணிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘அரசு விரைவுப் பேருந்துகளில் நிர்ண யிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பண்டிகை நாட்களை யொட்டி கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. சமீபத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத் தில் புதிய பேருந்துகள் இணைக் கப்பட்டுள்ளதால், பயணம் செய்ய வசதியாக இருக்கிறது.
மேலும், தனியார் பேருந்து களுக்கு இணையாக சேவைகள் வழங்கப்படுகின்றன. இதனால், அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்து வருகிறோம். இருப்பினும், புதிய பேருந்துகளைப் பராமரிப்பதில் நிர்வாகம் மெத்தனம் காட்டாமல் இருக்க வேண்டும்’’ என்றனர்.
விரைவில் 300 புதிய பேருந்துகள்
இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு விரைவுப் பேருந்துகளிலும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதற் கிடையே, புதிய பேருந்துகளின் வருகையால் பயணிகளின் எண் ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 600 புதிய பேருந்துகள் இணைக்கப்பட் டுள்ளன. இந்த புதிய வகை பேருந்துகளின் வசதி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
விரைவு போக்குவரத்துக் கழகத்தில் சராசரியாக ஒரு நாள் பயணிகளின் எண்ணிக்கையும் 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. புதிய பேருந்துகளால் பயணிகளுக்கு நல்ல வசதி கிடைப்பதுடன், அரசுக்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது.
முன்பெல்லாம், அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு குறைவாக இருக்கும். ஆனால், இப்போது தொடர்விடுமுறை மற்றும் பண்டிகை நெருங்கும் போதே விரைவுப் பேருந்துகளில் மக்கள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். வரும் ஆயுதபூஜைக்கு மட்டுமே இது வரை 15 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
சொகுசு, ஏசி பேருந்துகள்
இதற்கிடையே, அடுத்த கட்டமாக 300 புதிய பேருந்துகளை விரைவு போக்குவரத்துக் கழகத் தில் இணைக்கத் திட்டமிட் டுள்ளோம். சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் அதிக அளவில் இருக்கும். இந்த புதிய பேருந்துகளும் மக்களின் பயன்பாட்டுக்கு வரும்போது தினசரி பயணிகளின் எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source https://www.hindutamil.in/news/tamilnadu/517372-people-return-to-setc-4.html