Usage of 5 Mirrors on AIS 052 Body Code MTC TNSTC
ஒரு திறமையான ஓட்டுனருக்கு கண்ணாடி என்பது மிகவும் உதவிகரமான ஒன்று சற்று மிகைப்படுத்தி கூறினால் முதுகின் பின்னால் உள்ள கண் போன்றது. தேசிய நெடுஞ்சாலலைகளில் குறிப்பாக ஆறு நான்கு வழிசாலைகளில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்களில் பெரும்பாலும் பின்னால் மற்றும் பக்கவாட்டில் இருந்து வரும் வாகனங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதுவது என வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சாலைகளை கார்பந்தய மைதானமாகவே பலரும் நினைத்து பெரிய வாகனங்களோடு போட்டியில் ஈடுபடுகின்றன. சிரிய வாகனங்கள் மிக நெருக்கத்தில் வரும்பொழுது குறிப்பிட்ட தூரத்தை தாண்டி பின்புற கண்ணாடியில் வாகனங்கள் தெரிவதில்லை.
இதேபோல் வாகனநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பெரும் மாநகரங்களில் பேருந்துகளை இயக்குவதில் பெரும் சவாலான விஷயம் தான் சாலையில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் நுழையும் இருசக்கர வாகனங்கள். பேருந்துகளை ஒட்டியே வரும் வாகனங்கள் என நெருக்கடியில் பேருந்துகளை இயக்குவதை எளிதாக்கவே ஓட்டுனரின் பார்வையில் இருந்து மறையும் இடங்களை தெளிவாக காட்டவே பேருந்தின் முன்பகுதியில் 5 கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. 5 கண்ணாடிகள் என்ன என்ன அதன் முழுமையான பயன் என்ன என்பதையே விளக்கவே இப்பதிவு.
எல்லோருக்கும் எளிமையாக புரியும் வண்ணத்தில் இந்த பதிவை தயார் செய்த வினோத்குமார் கந்தசாமி மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த நாகராஜ் அவர்களுக்கும் நன்றி. இதை தயார் செய்ய முழு உறுதுணையாக இருந்த சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.
Vinothkumar Kandasamy Linkedin
Click on images for enlarged view.