TNSTC Old Ticket Exhibition at Trichy
நமக்கெல்லாம் பேருந்து என்றாலே மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் பேருந்து பயணங்கள் என்றாலோ அதை புகைப்படம் எடுப்பது என்றாலோ கொண்டாட்டாம் தான். ஒவ்வொரு பேருந்தும் ஒவ்வொரு விதமான ரசனை, அழகு. பேருந்துகள் நம்மை விட்டு பிரிந்து சென்றாலும் அதன் அடையாளங்களாக இருப்பது அதன் புகைப்படங்களும், பயணச்சீட்டுகளும் தான். பேருந்துகள் போலவே அதில் கொடுக்கப்படும் பயணச்சீட்டுகளும் சுவாரஸ்யமான ஒன்று.
1972ல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலான பேருந்து பயணச்சீட்டுகளை சேகரித்து வைத்துள்ளார் பல பழைய பயணச்சீட்டுகள் இன்னும் கிடைக்கவில்லை அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை பேருந்துகளில் கொடுக்கப்பட்ட பயணச்சீட்டுகள், அரிதான பயணச்சீட்டுகள், பயணச்சீட்டுகளில் ஃபேன்சி (Fancy) எண்கள், கணித சிறப்பு எண்கள், 0 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையிலான பயணச்சீட்டுகள், தனியார் பேருந்து பயணச்சீட்டுகள், பேருந்து பாஸ் (Pass), கையால் எழுதிக் கொடுக்கப்படும் பயணச்சீட்டுகள், என பல வகையாக தொகுத்து இருக்கிறார்.
அடுத்த மாதம் 14,15,16 அன்று திருச்சியில் உலக பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக நடைபெறும் கண்காட்சியில் பேருந்து பயணச்சீட்டுகள் சுவாமிநாதனால் காட்சிப்படுத்த இருக்கிறது. இதைத் தவிர மற்ற சேகரிப்பார்கள் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகள், பழைய காலத்து பொருட்கள் ஆகியவையும் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன… தமிழகத்தின் பொது போக்குவரத்து சம்பந்தப்பட்ட பல வரலாற்று சிறப்புமிக்க தகவல்கள் இடம்பெறவுள்ளன. உங்கள் கண்களுக்கு நிச்சயமாக இது விருந்தாக அமையும்…
அனுமதி இலவசம்…
அனைவரும் வருக…
தேதி : ஜுன் 14, 15, 16
இடம் : ஶ்ரீநிவாசா ஹால், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்,
வில்லியம்ஸ் ரோடு, ஹோட்டல் பெமினா எதிர்புறம். திருச்சி – 620001.