TNSTC Crews get appreciation from Public Media

கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள், ‘சிக்ஸ் டிராக் ஆடியோ சிஸ்டம், எல்.இ.டி., டிவி’ என, திருப்பூருக்கு வரும் அரசு பஸ்சை, பயணிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். அரசு பஸ் என்றால் திறக்க முடியாத ஜன்னல், கிழிந்த இருக்கைகள், ஓட்டை, உடைசல் என, கற்பனை விரியும். மேலும், டீசல் சிக்கனம் என்று கூறி, பஸ்சை உருட்டுவதால், பயணிகள் தனியார் பஸ்களை நாட துவங்கினர். இந்நிலையில், திடீர் மாற்றாக, தேவகோட்டையில் இருந்து, திருப்பூருக்கு வந்து செல்லும் ஒரு அரசு பஸ், தனியார் பஸ்களை மிஞ்சும் வகையில் ஜொலிப்பது,பயணிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

devakottai-tiruppur

அக்கறை :

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருந்து, காலை, 8:00 மணிக்கு புறப்படும், அரசு பஸ், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வழியாக மாலை, 5:00 மணிக்கு திருப்பூர் வந்தடைகிறது. பஸ்சில், இரண்டு, ‘எல்.இ.டி., டிவி’ 5.1, எம்.பி., ‘டிவிடி’ எட்டு இடங்களில், ‘ஸ்டீரியோ, வூபர்’ பொருத்தப்பட்டு, சினிமா திரையிடப்படுகிறது. இதற்காக, 10, ‘பென் டிரைவ்’ வைக்கப்பட்டு உள்ளன; தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் பயணிகளுக்கு ஏற்படுகிறது. பஸ்சின் முன் கண்ணாடியில், புறப்படும் நேரம், சென்றடையும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஸ் சக்கரங்களில், ‘கிளாசிகல் வீல் கப்’ நான்கு புறமும், அலங்கார வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. பஸ் புறப்படுகையில், விளக்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்து, பயணிகளை திரும்பி பார்க்க வைக்கிறது. அரசு பஸ் தானே என்று அலட்சியம் காட்டாமல், அக்கறையோடு, பஸ்சில் இவ்வளவு வசதிகளை செய்து, தினமும் பராமரிப்பது, வேறு யாருமல்ல… பஸ்சில் பணிபுரியும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தான்.

திருப்தி :

பஸ் ஊழியர்கள் கூறுகையில், ‘எங்களது சம்பளத்தின் ஒரு தொகை மற்றும் ஊக்கத்தொகையை சேர்த்து, அதிகாரிகளின் அனுமதியோடு, பஸ்சை அழகுபடுத்தி உள்ளோம். தினமும், பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்தியவுடன், சுத்தம் செய்கிறோம்; இவ்வாறு செய்வதால், வேலையில் ஒரு திருப்தி கிடைக்கிறது’ என்றனர்.
அரசு பஸ், ‘பளபள’வென காட்சியளிப்பதால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; இந்த பஸ்சின் வருகைக்காக காத்திருப்போர் ஏராளம். அரசு பஸ்களை, பயணிகள் புறக்கணித்து வந்த நிலையில், ஓட்டுனர், நடத்துனர்களின் செயல்பாடு பாராட்டும் வகையில் இருக்கிறது.

அந்த பாராட்டுக்குரிய ஊழியர்கள்:

முருகேசன் – தேவகோட்டை, ரங்கராஜ் – மணப்பாறை, கண்ணன் – தேவகோட்டை,-
பாரதிதாசன் – சிவகங்கை.

Source : Dinamalar

TNSTC Crews get appreciations from Public Media. TNSTC Karaikudi Devakottai Depot Devakottai Tiruppur Bus gets attention by its maintenance equal to private. Colourfull Lights, LED TV, 5.1 Digital Surrond Systems. These are all maintained by the crews of the bus with prior permission from the Depot Officials. They spend their incentives and part of a salary. As the bus is maintained well it gets good attention from Public and easily get filled in starting point itself. The Bus gives a feel of cinema hall inside. The crews are satisfied by their work they do to their bus.

The Crews are Murugesan Devakottai, Rangaraj – Manapparai, Kannan – Devakottai and Bharathidasan – Sivagangai. This team only maintaining the bus equal to Private. Devakottai Departure time is 08:00 A.M. Tiruppur 11:00 P.M.

Advertisement
This entry was posted by Ar uN.

One thought on “TNSTC Crews get appreciation from Public Media

  1. அதாவது அரசு பேருந்துகளை அதன் ஊழியர்களா கவனித்தால் தான் உண்டு.

    Jeyam Ramachandran

    On 15 Oct 2016 14:31, “TNSTC Blog – TamilNadu State Transport Corporation
    Blog” wrote:

    > Arun posted: “கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள், ‘சிக்ஸ் டிராக் ஆடியோ
    > சிஸ்டம், எல்.இ.டி., டிவி’ என, திருப்பூருக்கு வரும் அரசு பஸ்சை, பயணிகள்
    > ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். அரசு பஸ் என்றால் திறக்க முடியாத ஜன்னல்,
    > கிழிந்த இருக்கைகள், ஓட்டை, உடைசல் என, கற்பனை விரியும். மேலும”
    >

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: