21,289 Special Buses for Deepavali all over TN

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பஸ்கள்: சென்னையில் 5 இடங்களில் இருந்து புறப்படும்

தீபாவளி பண்டிகையொட்டி 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 21,289 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பஸ்கள்: சென்னையில் 5 இடங்களில் இருந்து புறப்படும்
சென்னை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைந்துள்ள மாநகர போக்குவரத்து கழக அண்ணா நகர் (மேற்கு), மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் மற்றும் பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகிற 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

1. ஆந்திரா செல்லும் பஸ்கள்:-

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பஸ்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

2. இ.சி.ஆர். மற்றும் காஞ்சீபுரம் பஸ்கள்:-

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் மற்றும் காஞ்சீபுரம் செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

3. விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பஸ்கள்:

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும் (எஸ்.இ. டி.சி. உள்பட) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் (மெப்ஸ்)ல் இருந்து புறப்படும்.

4. வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள்

பூந்தமல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

5. இதர ஊர்களுக்கு செல்லும் பஸ்கள்

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, செங்கானாச்சேரி, கொட்டாரக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

சென்னையில் இருந்து 26-ந்தேதி 3 ஆயிரத்து 254 பஸ்களும், 27-ந்தேதி 3 ஆயிரத்து 992 பஸ்களும், 28-ந்தேதி 3 ஆயிரத்து 979 பஸ்களும் மொத்தம் 11 ஆயிரத்து 225 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதர பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ள சிறப்பு பஸ்கள்:-

26-ந்தேதி 2 ஆயிரத்து 507 பஸ்களும், 27-ந்தேதி 3 ஆயிரத்து 488 பஸ்களும், 28-ந்தேதி 4,069 பஸ்களும் மொத்தம் 10,064 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

Source : TN Press Release

tamil-nadu-setc-buses

21,289 Special Buses will be operated in Tamil Nadu For Deepavali on 26 – 28 October.

From Chennai.

26 Oct 3,254 Buses
27 Oct 3,992 Buses
28 Oct 3,979 Buses Total 11,225 Buses

In Rest of TN.

26 Oct 2,507 Buses
27 Oct 3,488 Buses
28 Oct 4,069 Buses Total 10,064 Buses

In Chennai Special Buses will be departed from 5 different places.

1. Andhra bound via Red Hills will depart from Anna Nagar West MTC Bus Station
2. Kancheepuram and ECR bound will depart from Election Commission BS opp to CMBT in 100 Feet road.
3. Kumbakonam, Tanjore bound include SETC via Vikaravandi, Panruti will depart from Tambaram Sanitorium BS near MEPZ.
4. Vellore, Dharamapuri, Hosur bound via Poonamallee will depart from Poonamallee Bs.
5. South and west Bound rest will depart as usual from CMBT on way it will take ORR and reach Urapakkam in GST. Some changes done for pickup points. Passengers selected Tambaram / Perungalathur boarding point are requested to board from Urapakkam temporary bus stand.

MTC will operate special Buses to all Temporary Bus stands between these days.

This entry was posted by Arun.

One thought on “21,289 Special Buses for Deepavali all over TN

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: