TNSTC-Kumbakonam received 202 new buses
TNSTC-Kumbakonam received 202 new buses in yesterday’s inauguration. Following are the region wise allocation in Kumbakonam division
- Kumbakonam – 32
- Trichy – 57 (Trichy Dt – 40, Ariyalur Dt – 11, Perambalur Dt – 6)
- Karur – 14
- Karur 1 and 2 – 5
- Musiri – 3
- Aravakurichi – 3
- Kulithalai – 3
- Karaikudi – 31
- Pudhukottai – 31
- Pudhukottai – 7
- Trichy – 9
- Aranthangi – 6
- Alangudi – 4
- Ponnamaravathy – 2
- Kantharvakottai – 2
- Pattukottai – 1
- Nagapattinam – 37?
Region wise allocation details: Dinamani district news
கும்பகோணம் மண்டலத்துக்கு 32 புதிய பேருந்துகள்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் கும்பகோணம் மண்டலத்துக்கு வழங்கப்பட்ட 32 புதிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் மண்டலத்துக்குட்பட்ட பல தடங்களில் 32 புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவற்றை முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
கரூர் : 14 புதிய பேருந்துகள் இயக்கம்
கரூர் மாவட்டத்தில் 14 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா கரூர் மாவட்டத்திற்கு 14 புதிய பேருந்துகளை வழங்கிக் கொடியசைத்து தொடக்கி வைத்ததையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகம் கரூர் மண்டல அலுவலகத்தில் புதிய பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் பார்வையிட்டு கூறியது:
கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தேவைக்கேற்ப போக்குவரத்து வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழக முதல்வர் கூடுதலாக 14 புதிய பேருந்துகளை வழங்கியுள்ளார்.
இதன்மூலம் கரூர் கிளைப் போக்குவரத்து பணிமனைக்கு 5 பேருந்துகளும், முசிறி கிளைப் போக்குவரத்து பணிமனைக்கு 3 பேருந்துகளும், அரவக்குறிச்சி கிளை போக்குவரத்து பணிமனைக்கு 3 பேருந்துகளும், குளித்தலை கிளை போக்குவரத்து பணிமனைக்கு 3 பேருந்துகளும் வழங்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன.
புதுகைக்கு 31 புதிய பேருந்துகள்: முதல்வர் தொடங்கிவைத்தார்
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்பட்ட 31 புதிய பேருந்துகளை காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இயக்கிவைத்தார்.
இதையொட்டி, போக்குவரத்துக் கழகப் பணிமனையில் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் சு. கணேஷ் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கிப் பேசியது:
பயணிகள் தங்குதடையின்றி பேருந்து பயணத்தை மேற்கொள்ளும் வகையில், புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக வாங்கப்பட்ட 31 புதிய பேருந்துகளை முதல்வர் காணொலிக்காட்சி மூலம் இயக்கி வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மண்டலத்தில் புதுக்கோட்டை, திருச்சி, அறந்தாங்கி, ஆலங்குடி, பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, பட்டுக்கோட்டை ஆகிய கிளை அலுவலகங்களுக்கு 31 புதிய பேருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், புதுக்கோட்டை கிளைக்கு 7 பேருந்துகள், திருச்சி- 9, அறந்தாங்கி- 6, ஆலங்குடி- 4, பொன்னமராவதி- 2, கந்தர்வகோட்டை- 2, பட்டுக்கோட்டை- 1 என வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் புதுக்கோட்டை, திருச்சி, தேவகோட்டை, பொள்ளாச்சி, திருச்செந்தூர், கோயம்புத்தூர், அறந்தாங்கி, சென்னை, கொடைக்கானல், ஈரோடு, வேலூர், மதுரை, தஞ்சாவூர், திருப்பூர், பழனி, பேராவூரணி, மீமிசல், மேட்டுப்பாளையம், கரூர், ஆலங்குடி, பொன்னமராவதி, சிதம்பரம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் கிடைத்துள்ளன என்றார் ஆட்சியர்.
காரைக்குடி: போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலத்திற்கு 31 புதிய பேருந்துகள்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலத்திற்கு 31 புதிய பேருந்துகளை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காணொலிக்காட்சி மூலம் அறிமுகம் செய்தார்.
மதுரை, ராமேசுவரம், கோயம்புத்தூர், காஞ்சீபுரம், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, குமுளி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நீண்டதூர பேருந்துகள் உள்பட 31 பேருந்துகள் காரைக்குடி மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்டன.
Pingback: TNSTC Kumbakonam New Buses from February 08 2016 Inaugural | TNSTC Blog - TamilNadu State Transport Corporation Blog