New Small buses added to Trichy region of TNSTC-Kumbakonam
New uppilipuram depot is added to Trichy region. Four small buses were added to Hill station routes like Top Sengattupatti, Nalla Maththi, Shola Maththi, Puththur and Nagore.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த மலை கிராம பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதையொட்டி திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மலை கிராம பஸ்கள்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டல அலுவலகம் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய பணிமனை கட்டப்பட்டு உள்ளது. இதனை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த டாப் செங்காட்டுப்பட்டி, நல்ல மாத்தி, சோளமாத்தி, புத்தூர், நாகூர் ஆகிய மலை கிராமங்களுக்கு 4 மினி பஸ்கள், 4 டவுண் பஸ்கள் மற்றும் 23 புறநகர பஸ்களின் இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
Source: Dinathanthi