New depot at Kattumannarkovil in Cuddalore district
Land identified for constructing a new depot at Kattumannarkovil in Cuddalore district. Request for creating a new depot at Kattumannarkovil was there for past 15 years. Due to various reasons in identifying right land, the depot construction got delayed. Now the land is identified and the cleaning work is in progress.
This new depot for better connectivity with the nearby villages and also it will help adding buses to long distance places like Chennai.
போக்குவரத்து பணிமனைக்கு இடம் தேர்வு: காட்டுமன்னார்கோவில் மக்கள் மகிழ்ச்சி
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு இடம் தேர்வாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது காட்டுமன்னார்கோவில். இப்பகுதி மக்கள் போதிய பஸ் வசதியின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு, சிதம்பரம் சென்றே செல்ல வேண்டிய நிலை உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண காட்டுமன்னார்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்க வேண்டும் என பொது நல அமைப்பினர் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்பேரில் அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் இடம் தேர்வு செய்யும் போதும் பல்வேறு அரசியல் குறுக்கீடு காரணமாக தடைபட்டு வந்தது. தற்போதைய எம்.எல்.ஏ., முருகுமாறன் தனது கன்னிப் பேச்சில், இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அதன் பேரில் அதிகாரிகள் மூன்று இடங்களை தேர்வு செய்தனர். அதுவும் பல்வேறு காரணங்களால் நிாகரிக்கப்பட்டது.
தற்போது, ஏற்கனவே இலங்கை அகதிகள் முகாம் இயங்கிய வேளாண் விற்பனை சங்கத்திற்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, துறை அதிகாரிகளிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.அதன்பேரில், அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணி நேற்று துவங்கியது. இப்பணியை முருகுமாறன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். பணிமனை துவங்கப்பட்டால், இங்கிருந்து சென்னை போன்ற தொலைதூர நகரங்களுக்கும், சுற்று வட்டார கிராமங்களுக்கும் தடையின்றி பஸ் போக்குவரத்து கிடைக்கும். மேலும், முட்டம் பாலமும் திறக்கப்பட்டதால் அந்த வழியாக மயிலாடுதுறை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வாய்ப்பு உள்ளதால் தொகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Source: Dinamalar