Roam around Kodaikanal’s 11 Tourist places for Rs.80
TNSTC-Madurai’s Dindigul region operates special buses for this summer season from Madurai, Dindigul and Palani. Along with this Dindigul region operates special tourism based buses from Kodai bus stand to 11 places like Upperlake view, Moyar point, Pine forest, Guna caves, Pillar rock, Green valley view, Golf club, 500 years old tree, coakers walk and Bryant park. Public can visit all these 11 places for a fare Rs.80.
கொடைக்கானலை 80 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
கொடைக்கானல், ஏப்.29–
கொடைக்கானலில் மே மாதம் முழுமையான சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். சுற்றுலா பயணிகளின் வருகைக்காக மதுரை, திண்டுக்கல், பழனி பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயங்கி வருகின்றன.
வத்தலக்குண்டு டிப்போவில் இருந்து சிறப்பு பஸ்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கப்படுகிறது. மேலும், சுற்றுலா இடங்களைப் பார்வையிட கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, அப்பர்லேக் வியூ, மோயர்பாயிண்ட, பைன் பாரஸ்ட், குணாகுகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோல்ப் மைதானம், பாம்பார் ஆறு, 500 ஆண்டு மரம், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா ஆகிய 11 இடங்கள் சுற்றி காண்பிக்கப்படும். கடைசியில் ஏரிப்பகுதியில் இறக்கிவிடப்படுவர்.
12 இடங்களையும் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.80 கட்டணம். 12 வயதிற்குபட்டவர்களுக்கு ரூ.40. இதற்கென தனி அலுவலர் ஒருவர் கொடைக்கானல் பஸ்டாண்டில் நியமிக்கப்பட்டு உள்ளார் என்றார்.
Source: Maalaimalar