TNSTC and Deepavali Rush in C.M.B.T.

This Travel Review article is from a FB page the author describes the past and the present condition of TNSTC Manangement during Deepavali rushes, Our Transport Minister Mr. Senthil Balaji was at C.M.B.T. for two days monitoring with TNSTC officials, we are impressed sir thanks for your presence and good work the by the officials and crews of TNSTC and Police Dept., Many Passengers had a wonderfulltravelling experience on this Deepavali, hope this continues on every festive rush of TN.

From FB பிரபல எழுத்தாளர்’s Page

dw

பிரபல எழுத்தாளர்

2008 தீபாவளினு நெனைக்கிறேன். மேலதிகாரி கையில கால்ல விழுந்து ரெண்டு நாள் லீவு கேட்டுட்டு தீபாவளி மொத நாள் ராத்திரி 11 மணிக்கு கோயம்பேடுல லேண்ட் ஆனேன். செம்ம கூட்டம். ஒரு பஞ்சரான பஸ் கூட நிக்கல ஆசியாவின் மிகப்பெரியா பேருந்து நிலையத்தில். நுழைவு வாயில் வழியா ஒரு பஸ் வரும் போர்டே இல்லாம. ஒரு 200 பேர் கொண்ட பெருங்கூட்டம் அந்த பேருந்தை துரத்தும் நடைமேடை வரை. என்ன ஊருக்கு போகுதுனே தெரியாம.

ஏமாந்த கூட்டம் திரும்ப நுழைவு வாயிலுக்கு வரும். அடுத்த பேருந்து. அடுத்த துரத்தல். நானும்தான். இப்படியே மாரத்தான் ஓடிய அந்த தீபாவளி கோயம்பேட்டில்தான் விடிந்தது. அப்போதான் புரிஞ்சிது. தீபாவளிக்கு மெட்ராஸ்லருந்து ஊருக்கு போறத விட எளிது 50, 60 பன்னிக்குட்டிய மேய்க்கிறதுனு.

விஷயத்துக்கு வருவோம். ‘வாடிக்கையாளர் சேவை’னா என்னனு இப்பதான் புரிய ஆரம்பிச்சுருக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்துக்கு. சும்மா சொல்லக்கூடாது, ஒரு பெரும் முன்னேற்பாடோடு, பல நிலை ஊழியர்களோடு களமிறங்கியுள்ளார்கள்.

சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள், ஒவ்வொரு நடைமேடைக்கும் மூன்று பேர் கொண்ட 3 தகவல் தொடர்பு நிலையங்கள், கோட்டம் வாரியாக உயரதிகாரிகள் கொண்ட குழு,( (கும்பகோணம் கோட்டம் உங்களை அன்புடன்… போன்ற வரவேற்பு வாசக பேனரோடு) Volunteers எனப்படும் வழிகாட்டுதல் ஊழியர்கள் (டிக்கெட்ட அவரே வாங்கிட்டு போய் கண்டக்டர்கிட்ட காட்டி எங்கள பஸ் ஏத்திவிட்டார் ஒருத்தர். ), பல காவலர்கள் ஆலோசனை, எச்சரிக்கை வாசக தட்டிகளோடு, நடைமேடை விபரங்கள் அடங்கிய துண்டுச் சீட்டு, MRP க்கு மேல விற்கும் கடைக்காரர்களை கண்காணிக்க (with cameraman) ஒரு போலீஸ் டீம், CCTV கன்ட்ரோல் ரூம்…. இப்படி. இதெல்லாம் நான் பாரத்த வரைதான்.

நிலையத்தில் நுழையும்போதே கன்ட்ரோல் ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி மூன்று பேரோடு CCTV பதிவுகளை வெறித்தபடி அமர்ந்திருந்தார். (நேத்து ஃபேஸ்புக்ல போட்டோ பாத்தப்போ ஸ்டண்டுனு நெனைச்சட்டேன். சார்ர்ர்ரி சார் ). அவர் நெனச்சிருந்தா மீடியாவ கூப்டு போட்டோ எடுத்துட்டு கெளம்பிருக்கலாம். Really impressed.

அதே வழக்கமான பயணிகள் கூட்டம்தான். ஆனால் யாருக்கும் படபடப்பில்லை. எங்கு பார்த்தாலும் யாராவது உதவ தயாராக இருந்தாரகள். போலீசோ, போக்குவரத்து துறை ஊழியர்களோ. ஒன்றரை மணி நேரம் சுற்றியதில் எந்த ஊருக்கும் வண்டி இல்லாமல் பயணிகள் தவித்ததாக தெரியவில்லை.
கடைசியாக பெருங்களத்தூரில் ஒரு ட்ராஃபிக் போலீஸ் டீம் ட்ராஃபிக் ஆகாமல் இருக்க கடுமையாக போராடிக்கொண்டிருந்தார்கள்.

திருச்சி டிக்கெட் மட்டும் ஏறு, பெரம்பலூர் போவாது, விழுப்புரம்லாம் எறங்கிக்கோன்ற காலங்காலமாக இருக்கும் அடவாடிகளை நீக்க வேண்டும். இன்னும் பல குறைகள் நிச்சயம் களைப்பட வேண்டும்தான். ஆனால் இன்றைய கோயம்பேடு அனுபவம் மிகச்சிறந்த ஒன்று. இது தொடர வேண்டும்.

This entry was posted by Arun.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: