தீபாவளிக்கு 9,088 சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும்: முதல்வர் ஓ.பி.எஸ். அறிவிப்பு!

9,088 Services of Special Buses will be operated by TNSTC / SETC during Deepavali holidays from Chennai CMBT and various destination across State from 17 to 21.

Source : Vikatan news

தீபாவளிக்கு 9,088 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: முதல்வர் ஓ.பி.எஸ். அறிவிப்பு!

சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து வரும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 9,088 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்கள் தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடும் வகையில், ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் சீரிய முறையில் இயக்கப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது.

ஜெயலலிதாவின் மக்கள் நலம் பயக்கும் இந்தத் திட்டத்தை இந்த ஆண்டும் செயல்படுத்துவது குறித்து ஓர் ஆய்வுக் கூட்டம் இன்று (11.10.2014) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவின் உத்தரவுப்படி கடந்த ஆண்டுகளில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதைப் போலவே, இந்த ஆண்டும் இயக்குவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, அனைத்து மாவட்ட தலை நகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 17ஆம் தேதி 501 சிறப்புப் பேருந்துகள், 18ஆம் தேதி 501 சிறப்புப் பேருந்துகள், 19ஆம் தேதி 699 சிறப்புப் பேருந்துகள், 20ஆம் தேதி 1,400 சிறப்புப் பேருந்துகள், 21ஆம் தேதி 1,652 சிறப்புப் பேருந்துகள் என 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மொத்தம் 4,753 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையைத் தவிர்த்து மாநிலத்தின் எஞ்சிய இடங்களிலிருந்து 17ஆம் தேதி 499 சிறப்புப் பேருந்துகள், 18ஆம் தேதி 601 சிறப்புப் பேருந்துகள், 19ஆம் தேதி 700 சிறப்புப் பேருந்துகள், 20ஆம் தேதி 1,234 சிறப்புப் பேருந்துகள், 21ஆம் தேதி 1,301 சிறப்புப் பேருந்துகள் என 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 4,335 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தத்தில், 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 9,088 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இயக்கப்படும். இது தவிர, மேற்காணும் நாட்களில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதுபோல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

This entry was posted by sreewings.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: