New Tittakudi-Tirupathi service launched
TNSTC-Villupuram started new Tittakudi-Tirupathi service.
Timings:
Tittakudi: 8:00 PM
Tirupathi: 6:00 AM
திட்டக்குடி : திட்டக்குடியிலிருந்து திருப்பதிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார்.
திட்டக்குடி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று திட்டக்குடியி லிருந்து திருப்பதிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவை துவக்க விழா நடந் தது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அருண்மொழிதேவன் எம்.பி., முன்னிலை வகித்தார். அமைச்சர் சம்பத் புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை துவக்கி வைத்தார்.விழாவில் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் கருணாநிதி, தமிழ ழகன் எம்.எல்.ஏ., மங்களூர் ஒன்றிய சேர்மன் கந்தசாமி, பேரூராட்சி சேர்மன் நீதிமன்னன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம், செயலர் தர்மராஜ், கூட்டுறவுவங்கிதலைவர் முல்லைநாதன், சிறுமுளை முத்துராமன், கவுன்சிலர்கள் செந்தில், சுரேஷ், வேல்முருகன், இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர். தினமும் இரவு 8 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 4 மணிக்கு திருப்பதியை சென்றடையும். மறுபடியும் அங்கிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திட்டக்குடிக்கு வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: Dinamalar