5 New Routes from Vilathikulam
5 புதிய வழித்தடங்களில் பஸ்கள்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
விளாத்திகுளம், டிச.20-
விளாத்திகுளத்தில் இருந்து 5 புதிய வழித்தடங்களில் பஸ்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதிய வழித்தடங்கள்
தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், விளாத்திகுளம் வழியாக 5 புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி விளாத்திகுளத்தில் இருந்து இருக்கன்குடி, பாலநத்தம் வழியாக விருதுநகருக்கும், குளத்தூரில் இருந்து விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் வழியாக மதுரைக்கும், விளாத்திகுளத்தில் இருந்து சூரங்குடி, வேம்பார், சாயல்குடி வழியாக கமுதிக்கும், புதூரில் இருந்து விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கும், விளாத்திகுளத்தில் இருந்து நாகலாபுரம், புதூர், பந்தல்குடி வழியாக அருப்புக்கோட்டைக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.
பஸ்கள் தொடக்க விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து புதிய வழித்தடங்களில் பஸ்களை தொடங்கி வைத்தார்.
அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் முருகன், வணிக மேலாளர் டைட்டஸ், கோட்ட மேலாளர் ஜெபராஜ், கிளை மேலாளர்கள் இருதயராஜ், சங்கர நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் ரூபம் வேலவன், இளைஞர் அணி செயலாளர் ரகுபதி, புதூர் யூனியன் தலைவர் தனஞ்செயன், நகர பஞ்சாயத்து தலைவர் பெரியபூசு, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தெய்வேந்திரன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் வேல் பாண்டியன், பொருளாளர் பொன்ராஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்பு செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Source : Daily Thanthi
5 New routes flagged off by Markandeyan M.L.A at villathikulam
Vilathikulam – Virudhunagar via Irukankudi, Palanatham
Vilathikulam – Kamudhi via Surangudi, Vembar, Sayalkudi
Kulathoor – Madurai via Vilathikulam, Pudhur, Aruppukottai (much needed service a long time demand from the area people/ merchants).
Pudhur – Tirunelveli via Vilathiuklam, Ettayapuram, Kovilpatti.
Vilathiuklam – Arrupukottai via Nagalapuram, Pudhur, Panthalkudi