MTC planning to add Color coding for routes

பஸ் நம்பருக்குப் பதில் கலரடிச்சு கலக்க சென்னை போக்குவரத்துக் கழகம்

சென்னை: ஒவ்வொரு வழியில் செல்லும் பேருந்துகளுக்கு ஒவ்வொரு நிற பெயிண்ட் அடித்தால் என்ன என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது. சென்னையில் பல்வேறு வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளுக்கு வழிகளைப் பொறுத்து ஒவ்வொரு நிறம் அளிப்பது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் இந்த எண் கொண்ட பேருந்து இந்த வழித்தடத்தில் போகும் என்று எண்களை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை. மாறாக இந்த நிற பேருந்து இந்த வழியில் செல்லும் என்று நிறங்களை நினைவில் வைத்தாலே போதுமானது.

இந்த திட்டம் முதல்கட்டமாக ஓஎம்ஆர் ரோட்டில் செயல்படுத்தப்படுகிறதாம். பின்னர் படிப்படியாக இந்த திட்டம் பிற வழித்தடங்கலிலும் அமல்படுத்தப்படுமாம். இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த 60 பேரை ஓஎம்ஆர் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது மாநகர போக்குவரத்து கழகம். இந்த திட்டம் குறித்து எம்பார்க் மற்றும் சென்னை சிட்டி கனெக்ட் ஆய்வு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: tamil.oneindia.in

This entry was posted by TNSTC.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: