New Classic Bus
Pic : TN Govt Press Release
தமிழ்நாடு முழுவதும் 189 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை கோட்டையில் இன்று காலை நடந்தது. புதிய பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு பஸ்சையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை- ஸ்ரீரங்கம் இடையே நவீன வசதிகளுடன் கூடிய கிளாசிக் பஸ் விடப்பட்டது. இந்த பஸ்சில் கேண்டீன் வசதி, கழிப்பறை வசதி இடம் பெற்று உள்ளது. இந்த “கிளாசிக்” பஸ்சை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆர்வமுடன் பார்வையிட்டார். இது தவிர புதுப்பிக்கப்பட்ட 55 பஸ்கள், கூடுதலாக 66 வழித்தடங்களில் மகளிர் பஸ்கள் ஆகியவற்றையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பஸ் டிரைவருக்கு சாவிகளையும் வழங்கினார். போக்குவரத்து கழக புறநகர் பஸ்களில் மாதாந்திர சலுகை கட்டணம் பெறும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். குழுவாக பயணம் செய்யும் பயணிகளுக்காக 10 சதவீத சலுகை பயண பதிவு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
இதையொட்டி புதிதாக “அம்மா ரத்ததான திட்டம்” என்ற ரத்ததான திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். போக்குவரத்து கழகங்களில் இருந்து ஓய்வு பெற்ற 822 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகைகளையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது 21 புதிய மண்டலங்கள் உள்ளன. புதிதாக ஊட்டி, கரூர், தூத்துக்குடி, நாகை ஆகிய பகுதிகளிலும் மண்ட லங்களை தொடங்கி வைத்தார். ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பில் பெருந்துரை மருத்துவ கல்லூரியில் புதிய சி.டி.ஸ்கேன், 54 பகுதி அலுவலகங்களுக்கு புதிய ஜீப்புகள், திருச்சி கிழக்கு, நாமக்கல் தெற்கு, பூந்தமல்லி, சங்கரன் கோவில், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 புதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திருப்பத்தூர், சூலூர், முசிறி, சீர்காழி, அருப்புக் கோட்டை ஆகிய 5 புதிய அலுவலகங்கள், தென்காசி, செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம், வள்ளியூர், குளித்தலை பகுதி அலுவலக ஓட்டுனர் தேர்வு தளம் ஆகிய திட்டங்களையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, போக்கு வரத்து துறை செயலாளர் பி.கே. பிரசாத், கமிஷனர் பிரபாகர் ராவ், நிரஞ்சன் மார்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
News: Malaimalar
New 189 Buses, 55 Refurbrished , additional 66 Ladies only Bus routes , Classic bus with Pantry and Chemical toilet bus between Srirangam and Chennai were flagged off by our Honble Cheif Minister J.Jayalalitha on Fort today.
10% discount on ticket fares where people travel in groups.
Ooty, Karur, Nagappatinam, Thoothukudi new divison were formed today.
Source: Maalaimalar
A welcome movement., very much appreciable. At the same time , Hon’ble C.M may kindly look into the pending retirement benefits of the retired employees of the Transport Corporations immediately to keep their family happy and peaceful.
LikeLike
tn33 crossed 3000series tirupur got a tn33 n 3007 in 106 route till now there is no new depots for tirupur region
LikeLike
bus very well but they should maintain properly other wise it will spoil total travelling quality setc can also try in non ac sleeper version it will be benefit for budget travellers
LikeLike
bus very well but they should maintain properly other wise it will spoil total travelling quality setc can also try in non ac sleeper version it will be benefit for budget travellers. And we are eagerly waiting for the classic busses for all routes
LikeLike
Pingback: Classic – Successful Product of SETC | TNSTC's Blog - Tamilnadu State Transport Corporation blog - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வலைப்பதிவு