6859 Special buses, 16 Reservation counters in CMBT – Reports Maalaimalar
கோயம்பேட்டில் 16 முன்பதிவு மையம்: தீபாவளிக்கு 6,859 சிறப்பு பஸ்கள்- ஜெயலலிதா உத்தரவு
சென்னை, நவ.4-
போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் மேலான உத்தரவுப்படி, தீபாவளித் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்கு ஏதுவாக, அனைத்து அரசு போக்கு வரத்துக் கழகங்களின் சார்பிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி, அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, கோயம்பேடு புறநகர்பேருந்து நிலையத்தில் இருந்து இம்மாதம் 9-ம் தேதி 768 பேருந்துகளும், 10-ஆம் தேதி 633 பேருந்துகளும், 11-ஆம் தேதி 543 பேருந்துகளும, 12-ஆம் தேதி 884 பேருந்துகளும இயக்கப்பட உள்ளன.
அதேபோல், சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 9-ஆம் தேதி 925 பேருந்துகளும, 10-ம் தேதி 940 பேருந்துகளும், 11-ம் தேதி 977 பேருந்துகளும், 12-ம் தேதி 1189 பேருந்துகளும், ஆக மொத்தம் 9-ந் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 6,859 ச¤றப்புப் பேருந்துகள் இயக்கப்பபட உள்ளன. அவ்வாறே, தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.
300 கி.மீ. தூரத்திற்கு மேல் செல்லும் ச¤றப்புப் பேருந்துகளுக்கு இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையில், (online ticket reservation system) http://www.tnstc.in பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இம்மாதம் 5-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சென்னைளயின் இதர பகுதிகளில் இருந்து தியாகராயநகர் பகுதிக்கும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கும் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலக தோலைபேசி எண். 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆணைக்கிணங்க தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source:
Maalaimalar
—————————————————–
Special buses from CMBT: 768 buses on Nov 9th, 633 buses on 10th Nov, 543 buses on 11th Nov, 884 on 12th november
Special buses excluding Chennai: 925 buses on Nov 9th, 940 buses on 10th Nov, 977 buses on 11th Nov, 1189 on 12th november
Same number of buses will be operated from 13th to 16th november also.
Special buses which covers 300+ KM distance can be reserved online in http://www.tnstc.in
MTC will operated 200 special buses to T.Nagar and CMBT from 5th to 13th november.
Thank you so much Honourable Chief Minister of Tamilnadu. we are welcoming your initiatives
LikeLike
excellent arrangements.hats off to the team & its leaders.
They deserve sincere appreciations. – shiva
LikeLike