Announcements in TN Assembly related to Transport department
Few items from today’s session – Maalaimalar
– 100 Mini buses to be introduced in Chennai city
– Totally 3000 buses will be procured in 2012-2013..MTC – 150, SETC-299, VPM-550, SLM-301, KUM-540, CBE-530, MDU-380, Nellai-250.
– All district HQ will be connected to chennai with AC Volvo buses.. First time we are hearing such announcement.
– TNSTC operate 19167 routes/buses. This will be increased to 20000.
– MTC’s present fleet strength will be increased to 3500 form 3146.
– TNSTC-Nellai will have a new HO at the cost of 1 crore.
– Passengers can start using daily passes in Vellore, Erode, Tirupur and Tuty cities.
– Number of TNSTCs divisions will be increased to 10 from 8.
– Srirangam will host the new HQ for Trichy, Perambalur, Ariyalur, Karur dist.. It will be formed by dividing TNSTC-Kumbakonam. It will be called as TNSTC-SriRangam..
– TNSTC-VPM will be divided and TNSTC-Vellore will be formed for Kanchipuram, Vellore and Thiruvallur.
– Body building units at Chrompet, Karur and Pollachi(CEC) will get upgradation works. Finally CEC is getting some upgradation.
——————————————————————————
சென்னை, மே. 8-சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார். அப்போது அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-
முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி உத்தரவுபடி சென்னை மாநகரில் பேருந்து வசதி அளிக்க இயலாத பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி அவர்களுக்கும் பேருந்து வசதி அளிக்கவும் அவர்கள் வசிக்கும் பகுதிகளை பேருந்து நிலையம், ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையிலும் முதன் முறையாக 100 மினி பஸ் மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும்.
2012-13-ம் ஆண்டில் அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 150 பஸ்களும், விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 299 பஸ்களும் விழுப்புரத்துக்கு 550 பஸ்களும், சேலத்துக்கு 301 பஸ்களும், கோவைக்கு 530 பஸ்களும், கும்பகோணத்துக்கு 540 பஸ்களும், மதுரைக்கு 380 பஸ்களும், திருநெல்வேலிக்கு 250 பஸ்களும் இதில் இயக்கப்படும்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு சென்று வர குளிர்சாதன வால்வோ பஸ் அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும். பஸ்களுக்கு கூண்டு கட்டும் திறனை அதிகரிக்க குரோம்பேட்டை, பொள்ளாச்சி, கரூர் ஆகிய இடங்களில் கூடுதலாக பட்டறை இயக்கப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் கடந்த மே மாத நிலவரப்படி 19,167 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதை 20 ஆயிரமாக உயர்த்த புரட்சித்தலைவி அம்மா உத்தரவிட்டுள்ளார். தொலைநோக்கு பார்வை 2023 திட்டத்தின்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கடந்த ஆண்டு 3146 ஆக இருந்த வழித்தடங்களை இந்த ஆண்டு 3,500 வழித்தடங்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
…
திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ. 1 கோடியில் தலைமை அலுவலகம் கட்டப்படும். பயணிகள் விருப்பம்போல் பஸ்சில் பயணம் செய்யும் பயண சீட்டு சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் வேலூர், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது 8 அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இதை 10 ஆக மாற்றி அமைக்க முதல்- அமைச்சர் புரட்சித்தலைவி உத்தரவிட்டுள்ளார். கும்பகோணம் கோட்டத்தை பிரித்து ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கி ஸ்ரீரங்கம் போக்குவரத்து கழகம் உருவாக்கப்படும்.
இதேபோல விழுப்புரம் கோட்டத்தை பிரித்து காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களை உள்ளடக்கி வேலூர் போக்குவரத்து கழகம் உருவாக்கப்படும்.
…
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
Source: Maalaimalar
thanks for ur information
LikeLike
Thanks to cheif minister and transport minister to open new tnstc for our region in tnstc srirangam we are happy in opening that.
LikeLike
PRACTICALLY IMPOSSIBLE ANNOUNCEMENTS
LikeLike
TNSTC SRIRANGAM is very much useful for our region(Trichy,Perambalur,Ariyalur and Karur districts) and we are happy in that.
LikeLike
TNSTC SRIRANGAM is useful for Trichy and new Karur regions.
LikeLike
TNSTC SRIRANGAM is to be open we are happy in opening that.
LikeLike