பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பிரேக்டவுன் பாடாவதி பஸ்களுக்கு பெயர் எக்ஸ்பிரஸ்பதிவு

Dinakaran, நாள் : 7/18/2011

சென்னை : தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 986 பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 400க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. 48 ஏசி பஸ்களை தவிர, மற்றவை அனைத்தும் சொகுசு பஸ்களாகவே இயக்கப்படுகிறது. தினந்தோறும் ஒரு லட்சம் பயணிகள் இவற்றில் பயணம் செய்கின்றனர்.

விரைவு போக்குவரத்து கழகத்திற்கு மொத்தம் 19 பணிமனைகள் உள்ளன. இதில் பஸ்களுக்கு தேவையான டயர், கியர் பாக்ஸ் போன்ற உதிரிபாகங்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு பணிமனையிலும் நாள்தோறும் 6க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதாவது 100க்கும் மேற்பட்ட பஸ்கள் தினந்தோறும் இயக்கப்படுவதில்லை. இந்த பஸ்கள் ஸ்பேர் பஸ்சில் கணக்கிட்டு காட்டப்படுகிறது.

ஸ்பேர் பஸ் என்றால், உடனடித் தேவைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டிய பஸ்கள். ஆனால் உண்மையில் பழுதாகி பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் பஸ் பராமரிப்பு பணிகளும் முழுமையாக நடப்பதில்லை. இதனால் பிரேக் டவுண் பிரச்னை அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப பிரிவில் ஆட்கள் நியமித்து 12 ஆண்டுக்கு மேல் ஆகிறது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும் 4000க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் வாங்கப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் ஆகியவைகளுக்கு தலா 1000 புதிய பஸ்கள் ஒதுக்கப்படுகிறது. மற்ற போக்குவரத்து கழகங்களுக்கும் 500க்கும் அதிகமான பஸ்கள் ஒதுக்கப்படுகிறது. ஆனால் தமிழகம் முழுவதும் நீண்ட தூரம் பயணம் செய்யும் விரைவு போக்குவரத்து கழகத்திற்கு குறைவான பஸ்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக 150 பஸ்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இனியாவது அதிக புதிய பஸ்களை ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகளால் மக்கள் கூட்டம் அதிகமாக வரும்போது, போதிய அளவில் பஸ்களை இயக்க முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்கள் வசூலை அள்ளி விடுகின்றன. மற்ற மாநில பஸ்கள் இப்படி : தமிழக விரைவு பஸ்களை விட பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா பஸ்கள் பல்வேறு வசதிகள் கொண்ட நவீன பஸ்களாக உள்ளன. இதனால் அவை அந்த மாநில மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஆனால் விரைவு போக்குவரத்து கழகம் நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

10 ஆண்டை கடந்த 200 பஸ்கள்

விரைவு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கூறுகையில், ÔÔஒரு புதிய பஸ்சை இங்கு 3 ஆண்டுகள் மட்டுமே ஓட்ட வேண்டும். மற்ற போக்குவரத்து கழகங்களில் 6 ஆண்டுகள் வரை ஓட்டலாம். ஆனால் தற்போது விரைவு போக்குவரத்து கழகத்தில் 200 பஸ்கள் 10 ஆண்டுகள் பழமையானது. இதனால் பஸ்கள் தரமின்றி காணப்படுகிறது. மேலும் அடிக்கடி பிரேக் டவுண் ஆகிவிடுகிறது. சில நேரங்களில் சாலை விபத்துகளும் ஏற்படுகிறது.

பயண நேரம் பல மடங்கு ஆகிறது. இதனால் பயணிகள் எங்களை திட்டி தீர்த்து விடுகிறார்கள். இங்குள்ள பணிமனைகளில் அடிப்படை தொழில்நுட்ப தொழிலாளர்களை விட, கண்காணிக்கும் அதிகாரிகள்தான் அதிகம். ஒரு ஷிப்டில் 2 தொழில்நுட்ப தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆனால் எங்களை கண்காணிக்க 5 உயர் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இங்கு மட்டும் 68 தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது 27 தொழிலாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்ÕÕ என்றனர்.
—————————————————
An article describing the poor state of affairs at SETC:

SETC total number of buses – 986
AC buses – 48
Number of depots – 19

– On an average 100 SETC buses are down due to lack of spares
– No technical staff appointed for the last 12 years
– Last 2 years only 150 new buses inducted into the fleet of SETC.
– Neighbouring state corporations (Karnataka and Kerala) have better buses and SETC is losing customers on Interstate routes
– 200 buses have crossed 10 years of operation (as per guidlines, a bus should be operated only for 3 years in SETC)
– 2 workers are being managed by 5 supervisors in some cases in operations wing.
—————————————————————————————————
Link

This entry was posted by Subramanian R.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: