Dubba buses for Valparai
வால்பாறையில் ஓடும் “டப்பா’ பஸ்களால் வேதனை : ஆபத்து மிகுந்த பயணத்தில் மக்கள் அவதி!
o Valparai branch has around 44 buses and they make daily trips to estates near by and POY, CBE, Palani, Tirupur etc.,
o Too old registration nos: TN38 N – 545, 602, 603,609,545, 494.
o Private buses are not allowed in Valparai. – But i remember seeing one private bus running in Valparai-Chalakudy route.
o Buses alloted newly were transferred to other branches. 17 buses were allotted last year and they went to other branches at the same speed.
o Requirement is 32 technical staffs and it has only 20 Tech Staffs.
o Frequent breakdowns, Axle failures etc.,
o Drivers are asked to give more mileage in ghat routes with these old buses.
o Buses running in Valparai are not profitable, steps will be taken to rectify the frequent breakdowns – Comment by BM of Valparai.
Original Text in Tamil version:
வால்பாறை :வால்பாறையில் இயக்கப்படும் அரசு பஸ்கள் கழிவு செய்யப்பட வேண்டிய பழைய பஸ்களாக உள்ளதோடு, பழுதடைந்தும் உள்ளதால் அடிக்கடி விபத்துக்களும், பழுதடைந்து நின்று விடுவதும் தொடர்கதையாக உள்ளது.வால்பாறை கிளை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி, திருப்பூர், சாலக்குடி, காடம்பாறை மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு 44 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதே போல், பொள்ளாச்சி கோட்டத்திலிருந்தும் வால்பாறைக்கு பஸ்கள் இயக்கபடுகின்றன. வால்பாறையில் தனியார் பஸ்களுக்கு அனுமதியில்லாததால், அரசு பஸ்களையே வால்பாறை மக்கள் நம்பியிருக்க வேண்டியதுள்ளது. ஆபத்து மிகுந்த மலை பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும், பழுதடைந்தும், உடைந்தும் உள்ளன.நீண்ட கால கோரிக்கைக்கு பிறகு கடந்தாண்டு 17 பஸ்கள் வால்பாறை கிளைக்கு வந்தன. வந்த வேகத்திலேயே புதிய பஸ்கள் அனைத்தும் வேறு கிளைகளுக்கு தாரை வார்க்கப்பட்டன. மற்ற கிளைகளில் கழிவு செய்யப்பட்ட “டப்பா’ பஸ்கள் மீண்டும் வால்பாறையில் இயங்க துவங்கின. பஸ்களின் பாகங்கள் உடைந்தும், எந்நேரமும் எப்போது வேண்டுமானாலும் தனித்தனியாக பிரிந்து ஓடும் ஆபத்தான நிலையில் இயங்கி வருகின்றன.ஏற்கெனவே, தனியார் எஸ்டேட் ரோடுகள் பராமரிப்பு இல்லாமல், குண்டும் குழியுமாக இருக்கும் நிலையில், பழுதடைந்த பழைய பஸ்கள் காரணமாக, அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நிற்கின்றன.
நீண்ட நேரம் மாற்று பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.பஸ்களின் கூரைகள் உடைந்தும், இருக்கைகள் உடைந்தும், கம்பிகள் வெளியில் நீட்டிக்கொண்டும் உள்ளன. இதனால், பஸ்களில் ஏறும் பயணிகள் காயமடைவதும், மழை பெய்தால் ஒழுகுவதும் தொடர்கதையாக உள்ளது.ஹைபாரஸ்ட், சங்கிலிரோடு, வெள்ளமலை டாப், பன்னிமேடு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி லீப் கட்டாகியும், டயர் பஞ்ரசாகியும் விடுகின்றன. வால்பாறையில் இயக்கப்படும் பழைய “டப்பா’ பஸ்களால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் எட்டு சாலை விபத்துக்கள் ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் தற்போது பல்வேறு ரூட்களில் இயக்கப்படும் பஸ்கள் (டி.என். 38, – 545, 602, 603,609,545, 494) தள்ளாடும் நிலையில் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
பழுதடைந்த பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், அரசு பஸ்களை கண்டாலே பயணிகள் அலறியடித்து ஓடும் நிலை உள்ளது.அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் முத்துசாமி கூறுகையில், ” வால்பாறை மலைப்பகுதியில் இயக் கப்படும் அரசு பஸ்களால் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. வால்பாறையிலுள்ள எஸ்டேட் ரோடுகள் முழுவதும் மோசமாகவும், குண்டும் குழியுமாக உள்ளதால் பஸ்களை இயக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. பழைய பஸ்கள் அனைத்தும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
“32 பேருக்கு 20 பேர் தான்’: மற்ற பகுதிகளில் கழிவு செய்யப்பட்ட பஸ்கள் வால்பாறை மலைப்பகுதியில் இயக்கப்படும் நிலையில், வால்பாறை கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. 32 தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்க வேண்டிய கிளையில், வெறும் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், பஸ்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் முறையாக நடப்பதில்லை. மேலும், பழுதடைந்த பஸ்களை கொடுத்துவிட்டு, டிரைவர்களிடம் டீசலை மிச்சப்படுத்த வேண்டும் என நிர்வாகம் உத்தரவிடுவதால் டிரைவர்களும் வேதனையடைந்துள்ளனர்.
Source: Dinamalar
http://www.dinamalar.com/district_main.asp?id=287#34918